மினி சட்டசபை தேர்தல்: ஸ்டாலின் விருப்பம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மினி சட்டசபை தேர்தல்
ஸ்டாலின் விருப்பம்

சென்னை : 'லோக்சபா தேர்தலுடன், காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கும், மினி சட்டசபை தேர்தல் போல, ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மினி சட்டசபை தேர்தல், D.M.K, M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,விருப்பம்


அவரது அறிக்கை: தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். திருவாரூர் தொகுதியை தனிமைப்படுத்தி, இடைத்தேர்தல் நடத்த முயன்றதில் உள்நோக்கம் உள்ளது.

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில், நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடைய வில்லை. அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரண பணிகளில், பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பொதுமக்களின் அதிருப்தியும், கோபமும் அதிகமாகி, ஓட்டளிப்பதற்கு எதிரான மனநிலை உருவாகி விடும்.

தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட, புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, திருவாரூர் மக்களுக்கான நிவாரணப்பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பது, தி.மு.க., கருத்து. வரும் லோக்சபா தேர்தலுடன் இணைத்து, 'மினி சட்டசபை தேர்தல்' போல, காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் - ஜெயகுமார் மோதல்


சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடையே, கடும் விவாதம் நடந்தது. அதன் விபரம்:

எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: கவர்னர் உரையில், மத்திய அரசை கண்டிக்கவில்லை; மென்மையான வார்த்தைகளால் வருடியிருக்கிறீர்கள்.

அமைச்சர் ஜெயகுமார்: கவர்னர் உரையில், மத்திய அரசை கண்டிக்கவில்லை என, எதிர்கட்சி தலைவர் கூறுகிறார். தி.மு.க., ஆட்சி, 96 - 2001; 2006 - 11ல், நடந்தது. அந்த காலகட்டத்தில், எந்த கவர்னர் உரையிலும், மத்திய அரசை கண்டிக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement

ஸ்டாலின்: எங்கள் ஆட்சியில், கவர்னர் உரையில், மத்திய அரசை கண்டிக்கும் வார்த்தைகள் இருந்ததை, நான் நிரூபிக்க தயார். மத்திய அரசை கண்டிக்கும் வார்த்தை இல்லை என்பதை, அமைச்சர் நிரூபிக்க வேண்டும். இல்லையேல், அவர் கூறியதை, அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயகுமார்: நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அறிக்கை தயார் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்து, என்னிடம் நிருபர்கள் கேட்டபோது, 'மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்' என்று கூறினேன். இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-201910:59:11 IST Report Abuse

ramu narayananBJP NOTAvai win panna poradhu illai.

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜன-201916:06:23 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிமக்களுக்கு எந்த விதமான நன்மைகள் மத்திய அரசை எதிர்ப்பது ஓன்று தான் ஸ்டாலினின் கொள்கை போலும். அன்று இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக மடிந்த போது இவர் தகப்பன் பதவிக்காக டெல்லி சென்று மணிமேகலையிடம் மண்டியிட்டதை இவர் மறந்து விட்டாரோ?

Rate this:
கல்யாணராமன் - Chennai,இந்தியா
08-ஜன-201913:44:45 IST Report Abuse

கல்யாணராமன்தேர்தல் அறிவித்தால் எவனையாவது தூண்டிவிட்டு வழக்கு போட சொல்லி தடை வாங்குவீர்களா?

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X