கொல கேசு... கிணத்துல போட்ட காசு... | Dinamalar

கொல கேசு... கிணத்துல போட்ட காசு...

Added : ஜன 08, 2019
Share
அ ன்றைய தினம், ஆபீஸ் 'லீவு'. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மங்கி குல்லா, ஸ்வெட்டர் அணிந்து கொண்டு, காலை நேரத்திலேயே, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் 'ஷாப்பிங்'கிளம்பினர்.''மம்மி... என்னென்ன வேணும். 'லிஸ்ட்' சொல்லுங்க...'' என, மித்ரா கேட்க, ''மறக்காம, 'ஷாப்பிங் பேக்' கொண்டு போங்க... பாலித்தீன் கவர் யாரு கொடுத்தாலும் வாங்காதீங்க... சிக்கன் கடைக்கு போறதா
 கொல கேசு... கிணத்துல போட்ட காசு...

அ ன்றைய தினம், ஆபீஸ் 'லீவு'. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மங்கி குல்லா, ஸ்வெட்டர் அணிந்து கொண்டு, காலை நேரத்திலேயே, சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் 'ஷாப்பிங்'கிளம்பினர்.''மம்மி... என்னென்ன வேணும். 'லிஸ்ட்' சொல்லுங்க...'' என, மித்ரா கேட்க, ''மறக்காம, 'ஷாப்பிங் பேக்' கொண்டு போங்க... பாலித்தீன் கவர் யாரு கொடுத்தாலும் வாங்காதீங்க... சிக்கன் கடைக்கு போறதா இருந்தா, பாத்திரம் கொண்டு போங்க,'' என, அம்மா தரப்பில், 'அட்வைஸ்' மழை.உக்கடம் இறைச்சி கடை பக்கம் வண்டியை ஓரங்கட்டினாள் சித்ரா.இருவருக்கும் ஆச்சரியம்; கடைக்காரர்கள்மீனைஇலையில கட்டிக் கொடுத்தார்கள்.ஜனங்களும் பாத்திரமும், கூடையும் கொண்டு வந்திருந்தார்கள்.''இதே மாதிரி, எல்லாரும் மாறிட்டாங்கன்னா, நம்மூரு பிளாஸ்டிக் இல்லா நகரமாயிடும்,'' என, மித்ரா, 'சர்ட்டிபிகேட்' கொடுத்தாள்.''கார்ப்பரேசன் அதிகாரிங்களும் வீதி வீதியாக போக ஆரம்பிச்சிட்டாங்க. சொல்லிப் பார்க்குறாங்க. கேக்கலைன்னா, 'பைன்' தீட்ட ஆரம்பிச்சிடுறாங்க. ஒரு லட்சம் ரூபா வரைக்கும் அபராதம் போடுறதுக்கு,அதிகாரம் கொடுத்திருக்காங்க. இதுவரை, 10 ஆயிரம் ரூபாய் வரைதான் 'பைன்' போட்டுருக்காங்க. இனி, 'தாளிக்க' ஆரம்பிச்சுருவாங்களாம். சுகாதாரப் பிரிவுல பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா... சொல்லியும் கேட்கலைன்னா... என்ன செய்றது... 'பைன்' போட்டாதான் மாறுவாங்க''ஒரு கிலோ நண்டு வாங்கியதும், மீண்டும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.''அதெல்லாம் சரி... தி.மு.க.,காரங்கள பார்த்து, 'டவுன் பிளானிங்' ஆபீசருங்க 'பம்மு'றாங்களாமே...''''அதுவா... 'ஹோர்டிங்ஸ்' வைக்கக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டிருக்கு. வடகோவை மேம்பாலத்துல இருந்த 'ேஹார்டிங்ஸ்'கள மாநகராட்சி அதிகாரிங்க எடுத்தாங்க... தி.மு.க., ஆபீஸ் மேல இருக்கற ரெண்டை மட்டும் எடுக்க மாட்டேங்கிறாங்க. அதிகாரிகளும் தயங்குறாங்க. கட்சிக்காரங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க.''எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கு பிளக்ஸ் பேனர் வச்சதுனால இளைஞர் ரகு இறந்தாருன்னு கோர்ட்டுக்கு போனாங்களே...''''அதை விடுக்கா... ரொம்ப கெளறாதே... அரசியல் மேட்டரு... நாறிடும்... போலீஸ் மேட்டர் இருந்தா சொல்லு...'' என, கொக்கியை போட்டாள் மித்ரா.''இல்லாமலா... அ.ம.மு.க., நிர்வாகிய கொலை செஞ்சு கிணத்துல வீசுனாங்கள்ல...அதை எடுக்க தடாகம், துடியலுார் போலீஸ்காரங்க, 85 நாளா ரொம்ப சிரமப்பட்டாங்க. கிரேன், சாப்பாடு, ஆள் கூலி, கிணத்தை பக்கவாட்டுல தோண்டுனதுன்னு,பல 'ல'கரம் செலவு செஞ்சிருக்காங்க.''ஆர்வக்கோளாறுல, எஸ்.ஐ., ஒருத்தரு, சேமிப்பு பணம் ரெண்டு லட்சம் எடுத்துக் கொடுத்திருக்காரு. பணத்தை திருப்பி வாங்க,என்ன வழின்னு உயரதிகாரிட்ட கேட்டிருக்காரு. அவரோ, 'மாமூல்' வாங்கி, 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கோன்னு, கூலா சொல்லிட்டாராம்,''அப்போது, சித்ராவின், 'ஸ்மார்ட்' போன் சிணுங்கியது.போனை பேசி விட்டு வைத்தாள்.''யாருக்கா போன்ல?''''வேற யாருமில்லை...என் காலேஜ் பிரண்டு செந்தில்குமார்தான். ராத்திரி டின்னருக்கு வீட்டுக்கு வர்றதா சொல்றான்'' என்றாள் சித்ரா.''ஓகோ.... அப்புறம் இன்னொரு மேட்டர்...அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 'ஆக்ஸிடென்ட் கேஸ் ரெக்கார்டு' கேட்டுஜனங்கபோனா, அவுங்க சொல்ற வக்கீல்ட்டதான், கேஸ் கொடுக்கணும்னு சொல்றாங்க. எங்களுக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காருன்னு சொன்னா, கேஸ் ரெக்கார்டு கொடுக்க மாட்டேங்கிறாங்களாம்... நாளைக்கு வான்னு சொல்லி, இழுத்தடிக்கிறாங்களாம்''''அதெல்லாம் சரி... சின்ன தடாகத்துல செங்கள் சூளைக்கு ஓடுற ஏகப்பட்ட லாரி, போலீஸ் அதிகாரிகளுக்கு சொந்தமானதாமே...''''அவுங்க மட்டுமில்ல... ரெவின்யூ டிபார்ட்மென்ட், கனிம வளத்துறைன்னு பல அரசு துறைய சேர்ந்தவங்க, இல்லீகலா செங்கல் சூளை நடத்துறாங்க. மண் வளத்தை திருடுறதுல அவுங்க பங்குதான் அதிகமா இருக்கு. எஸ்.பி., 'ரெய்டு'க்கு போனா, ஏகப்பட்ட பெரும்புள்ளிகள் சிக்குவாங்க...''''ஆளுங்கட்சி சேதி ஒண்ணும்சொல்லலையே...'' என்றாள்மித்ரா.''ஆளுங்கட்சி வி.ஐ.பி., பெயரை பயன்படுத்தி, மதுக்கரைக்காரரு கட்டப்பஞ்சாயத்து செய்றாரு. கேரளாவுக்கு மணல் கடத்துறதுக்கு,இவருதான் ஒத்தாசையா இருக்காரு; தனது பெயருக்கு முன் வேல் வைத்திருக்கும் பேரூர் போலீஸ் அதிகாரி,பக்கபலமா இருக்காரு. வசூலிக்கிறதை ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கிறாங்க. மணல் கடத்தல் லாரியை நிப்பாட்டினா.... மூன்றெழுத்து வி.ஐ.பி., சொந்தக்காரர் ஆபீசுல இருந்து போன் வர்ற மாதிரி, 'செட்' பண்ணி வச்சிருக்காருங்க...''இவர்களை பார்க்காததுபோல், ஒருவர் பைக்கில் கடந்து சென்றார்.''அங்க பாரு... ஜோசப் போறாரு...'' என, அலறினாள் மித்ரா.'போனா போகட்டும்... அவர எதுக்கு வம்புக்கு இழுக்கிற' என, கடிந்துகொண்ட சித்ரா, ''இந்த மாசக்கடைசில, சி.பி.ஆர்., பதவி காலம் முடியுது. எம்.பி., 'சீட்' வாங்குறதுக்கு, 'ட்ரை' பண்றாரு. ஆனா, மூன்றெழுத்து லேடிக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. மக்களுக்கு நல்ல அறிமுகமாகி இருக்காங்க. மத்திய அமைச்சர்கள்ட்டேயும் நல்ல நெருக்கம் இருக்கறதுனால... எப்படியும் 'சீட்' கெடைக்கும்னு நம்புறாங்க...'' என்றவாறு, அவ்வழியாக சென்று, வானதி அக்காவை பார்த்து, கையை அசைத்தாள்.கலெக்டர் ஆபீசை கடந்து ஸ்கூட்டரில் சென்றபோது, ''சமூக பாதுகாப்புத்துறையில இருந்த லேடீஸ் ரெண்டு பேரு,'ரிசைன்' பண்ணிட்டாங்களாமே...''''ஆமாப்பா, மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில, தற்காலிக ஊழியர்களே கோலாச்சுக்கிட்டு இருக்காங்க. ஆய்வுங்கிற பேர்ல, விடுதிகளுக்கு போயி, 'கல்லா' கட்டுறாங்க. சமூக பாதுகாப்பு அலுவலரா யாரு வந்தாலும், 'டார்ச்சர்' கொடுத்து, ஓட ஓட விரட்டிடுறாங்க. அதான், அந்தரெண்டு பெண் அதிகாரிங்க, 'ரிசைன்' பண்ணிட்டு, கெளம்பிட்டாங்க. இப்ப, ஊட்டி அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்க. இங்கஇருக்கற பிரச்னைய தெரிஞ்சிக்கிட்ட அவரு, எப்படா... கெளம்பலாம்னு இருக்காரு. இதையெல்லாம்... மாவட்டத்தை நிர்வாகம் பண்ற அதிகாரி,கண்டுக்காம விடுறதுனால... அரசு துறையில... ஏகப்பட்ட புகைச்சல் ஓடுது...''''புகைச்சல் இருக்கட்டும்... போதை கலாசாரம் பெருகிக்கிட்டு இருக்காமே...''''ஆமாமா... ரொம்ப வருத்தமா இருக்கு... 'கூல் லிப்ஸ்'ங்கிற பெயர்ல, அஞ்சு ரூபாய்க்கு ஒரு போதைப்பொருள் வந்துருக்கு. ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ் ஏகப்பட்ட பேரு பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க... போலீஸ்காரங்க, 'ஸ்டெப்' எடுத்தா நல்லாயிருக்கும்''.- சொல்லி முடிப்பதற்கும், வீடு வருவதற்கும் சரியாக இருந்தது!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X