பொது செய்தி

இந்தியா

'மோசமான முதல்வர்' பினராயி விஜயன் : சொல்கிறது கூகுள்

Updated : ஜன 08, 2019 | Added : ஜன 08, 2019 | கருத்துகள் (97)
Advertisement
பினராயி விஜயன், கூகுள், சபரிமலை விவகாரம், கேரள முதல்வர் பினராயி விஜயன், மோசமான முதல்வர் பினராயி விஜயன், கூகுள் சர்ச்சை , 
Pinarayi Vijayan, Google, Sabarimala affair, Kerala Chief Minister Pinarayi Vijayan, Worst Chief Minister Pinarayi Vijayan, Google Controversy,

புதுடில்லி : பிரபல தேடு பொறியான கூகுளில் இந்தியாவின் மோசமான முதல்வர் என தேடினால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் விக்கீப்பிடியா பக்கம் காட்டப்படுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


எதிர்ப்பு


சமீபத்தில் கூகுளில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புகைப்படமும், டாப் 10 கிரிமினல்கள் என தேடினால் தாவூத் இப்ராஹிம், கடாபி ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியின் படமும் காட்டியது. அடுத்தடுத்த இது போன்ற நிகழ்வுகளால், உலக தலைவர்களை அவமதிப்பதாக கூகுள் நிறுவனம் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது மோசமான முதல்வர் என தேடினால் பினராயி விஜயனின் படம் காட்டப்படுகிறது.


சலசலப்பு


சபரிமலை விவகாரத்தில் கடும் எதிர்ப்புக்கள், போராட்டங்களையும் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. சபரிமலை விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் என கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பலரின் அதிருப்திக்கு பினராயி விஜயன் ஆளாகி உள்ளார். இந்நிலையில் கூகுளின் இந்த செயல் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


குற்றச்சாட்டு


இதன் பின்னணியில் எதிர்க்கட்சி இருப்பதாகவும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர்குலைப்பதற்காக இவ்வாறு நடந்துள்ளதாகவும் கேரள அரசு குற்றம்சாட்டி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஜன-201918:59:28 IST Report Abuse
meenakshisundaram இதை கூகுளே சொல்லனுமா?நமக்கே தெரிந்ததுதானே?
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
12-ஜன-201918:03:01 IST Report Abuse
S.BASKARAN கூகுள் மட்டுமல்ல இந்த உலக மக்கள் எல்லோரும் இவரை மோசமான மனிதர் என்றே சொல்ல வைத்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
11-ஜன-201910:00:02 IST Report Abuse
Muthukrishnan,Ram இந்த முதல்வரை மோசமான முதல்வர் என்றால்?? அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தவர்கள் அதைவிட மோசமானவர்கல் தானே தவறை செய்தது மக்கள் அதை மறந்து விட்டு தலைவர்களை ஏன் குற்றம் சொல்வானேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X