இனி செய்திதாள்களில் சுற்றி உணவுபொருட்கள் விற்றால் அபராதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இனி செய்திதாள்களில் சுற்றி உணவுபொருட்கள் விற்றால் அபராதம்

Updated : ஜன 08, 2019 | Added : ஜன 08, 2019 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உணவுப்பொருட்கள், செய்திதாள்கள், இந்திய உணவு  பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையம்,   பவன் அகர்வால் , 
Foods, Newspapers, Indian Food Safety Quality Control Commission, Pawan Agarwal,

புதுடில்லி : செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.
தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் புதிய வழிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் வேதி பொருட்கள் உணவு பொருட்களில் கலப்பதாக இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய 2 ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் 13.4 சதவீதம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணைய சிஇஓ பவன் அகர்வால் கூறுகையில், புதிய பேக்கிங் வழிகாட்டுதல்களை பின்பற்ற 2019 ம் ஆண்டு ஜூலை 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் பேக்கிங் விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் சட்ட விரோதமாக உதிரியாக பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Praveen - Chennai,இந்தியா
11-ஜன-201910:14:59 IST Report Abuse
Praveen பல நல்ல காரியம் செய்வதை யாரும் குறை கூறுவதில்லை ... குற்றங்கள் அதிகரித்துள்ளது , பெண்கள் பாதுகாப்பது கேள்விக்குறியாகியுள்ளது , ஒருதலை பட்சமாக சேவை செய்யப்படுகிறது மதவாதம் தலை தூக்கியுள்ளது .
Rate this:
Share this comment
Cancel
nandaindia - Vadodara,இந்தியா
09-ஜன-201913:04:23 IST Report Abuse
nandaindia இங்கே நாலரை ஆண்டுகால ஆட்சியை மட்டும் கேள்வி கேட்கும் நபர்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் எல்லோரும் அறுபது வருடங்களாக நடந்த ஆட்சியிடம் கேள்விகள் ஏதும் கேட்காமல் கடந்த நாலரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் கட்சியிடம் மட்டும் கேள்வி மேல் கேள்வி கேட்பது ஏன்? அறுபதாண்டுகள் நாட்டை ஆண்ட கட்சி இவைகளை எப்போதோ செய்திருக்கலாமே? ஆனால் அப்போதெல்லாம் இப்படி கேள்விக்கணைகளை நீங்கள் தொடுக்காதது ஏன்? கட்சி பாசமா அல்லது வேறேதுமா? மோடிஜி ஆட்சியில் எல்லாவற்றுக்கும் பொங்கி எழுவோர் கான்க்ராஸ் ஆட்சியின் போது தூங்கி கொண்டிருந்தது ஏன்?
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
10-ஜன-201916:58:19 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>நீண்டகாலம் ஆட்சி செய்தவா எல்லோரும் உத்தமரகாந்திஜியின் சீடர்கள் என்று நம்பி மோசம் போனாங்களோ என்னவோ சோனியாவிடம் ஆட்ச்சியும் அதிகாரமும் போச்சு நாசமாப்போச்சு என்பதுதான் உண்மை இப்போ இந்த பப்பு கிளம்பிருக்கு வேகாத கொண்டைக்கடலைப்போல கண்ராவி மக்கள் ஏமாந்தால் புளுகு மூட்டைகிட்டேயே ஆட்ச்சி புடும் நாடும் நாசமாப்போயிடும் . மக்களுக்கு எது நல்லாட்சி என்று புரியவேகூடாதுன்னுதான் இந்த ஆட்டம் போடுறானுக எல்லா எதிரிகளும்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
08-ஜன-201922:20:31 IST Report Abuse
K.Sugavanam செய்தி தாள் படிக்கும்போது கையில் மைய் ஒட்டி அது உடல்நலத்தை கெடுக்காதா?எனவே மத்திய அரசு ஈயம் கலந்த அச்சுமை உற்பத்திக்கும்,அதை உபயோகிப்பதற்கு தடை விதித்தால் நலம்..செய்தித்தாள்களை இனி காகிதத்தில் அச்சிட்டு விற்காமல் இணையத்தில் மட்டும் வெளியிட அனுமதிக்கலாம்..அந்நிய செலாவணி மிச்சமாகும்..நியூஸ் பிரிண்ட் இறக்குமதி குறையும்..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜன-201913:35:25 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை, அதில் காரீயம் (வெள்ளீயம் கெடுதல் தராது) கலந்துள்ளது. எனது சொந்தத்தில் ஒருவர் பேப்பர் போடுபவர் 10 வருடங்களுக்கு முன் மயக்கம் போட்டு விழுந்தார். காரணம், அவர் பேப்பரை எடுப்பதற்கு முன் தனது விரலை உதடு, நாக்கில் ஈரப்படுத்திக்கொள்வது வழக்கம். இதனால் பேப்பரில் உள்ள காரீயம் கலந்த மை உடலுக்குள் சென்று பாதிப்பு ஏற்பட்டது. இதை saturnism என்பார்கள். 60 வயதிற்குள்ளாகவே இறந்து போனார். பழைய பெயிண்டுகள், பயிப் லயன்களிலும் காரீயம் காணப் படுவதுண்டு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X