முக்கியமான வரலாற்று தருணம்: பிரதமர் மோடி பெருமிதம்

Updated : ஜன 09, 2019 | Added : ஜன 08, 2019 | கருத்துகள் (19)
Advertisement
முக்கியமான,வரலாற்று தருணம்,பிரதமர்,மோடி,பெருமிதம்

புதுடில்லி : பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 'நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் இது' எனவும் அவர் தெரிவித்தார்.


எம்.பி.,க்களுக்கு நன்றி:


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 'மசோதாவை ஆதரித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு சாதி, மதத்தை சேர்ந்த ஒவ்வொரு ஏழையும் கவுரவமான வாழ்க்கையை அடைய வேண்டும். அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த மசோதா நிறைவேறியது நாட்டில் ஒரு முக்கியமான வரலாற்று தருணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


ராஜ்யசபாவில்:

10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் விவாதங்களுக்குப் பிறகு, நேற்று(ஜன.,08) இரவு 9.50 மணிக்கு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இன்று( ஜன.,09) ராஜ்யசபாவில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
09-ஜன-201909:57:07 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் எதிரா 3 ஒட்டு சுடலை கட்சி காரணா போட்ருப்பான்??? இதுல இருந்தே தெரியுது சுடலை ஒரு களவாணி அப்புடின்னு....
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
09-ஜன-201908:28:49 IST Report Abuse
K.   Shanmugasundararaj இதுவந்து - பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லுமா என்பது விவாதத்துக்கு உரியது. ஏனென்றால் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார அந்தஸ்து இல்லாதவர்களுக்கு ( சோசியல்லி அண்ட் எகானமிக்கல்லி வீக்கர் செக்சன் ) என்று தான் உள்ளது. ஆக முன்னேறிய சாதியினர் சமுதாயத்தில் அந்தஸ்து / மரியாதை உடையவர்கள்.அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. மேலும் இது அரை குறை முயற்சி . ஏனென்றால் உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்துக்கும் மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு சொல்லி அது இன்று வரை அமுல்படுத்தப்படுகின்றது.. அந்த வரை முறையை நீக்கிட , ஓட்டுக்காக இந்த சட்டத்தை கொண்டுவந்த இந்த அரசு எதுவும் முயற்சி / நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும் இட ஒதுக்கீடு இல்லாத முன்னேறிய சாதியினர் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் உள்ளனர்.அதில் பொருளாதாரத்தில் வலுவற்றவர்கள் ( ஏழைகள் ) எத்தனை சதவிகிதம் உள்ளனர். எவ்வளவு வருமானம் இருந்தால் , பொருளாதாரத்தில் வலுவற்றவர்களாக கணக்கில் எடுக்கப்படுவர்.அதற்கு வறுமைக்கோடு அளவீடா. இதனை எல்லாம் வரையறுக்காமல் , அவசர கதியில் , வீழ்ந்துள்ள செல்வாக்கை சரிக்கட்டி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி ( கடந்த தேர்தலில் 15 லட்சம் )வோட்டு பொறுக்கிட இந்த மதவெறி அரசு செய்யும் செயலாகும். இந்த மதவெறியர்களுக்கு , உண்மையிலே இப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்கவேண்டும் என்று எண்ணம் இருந்து இருந்தால் , ராஜஸ்தானில் ஜாட் வகுப்பினர் , குஜராத்தில் படேல் வகுப்பினர் போராடிய போது , அவர்கள் மீது அடக்கு முறையை பிரயோகம் செய்தது எதனால். அப்பொழுதே , இத்தகைய சட்டத்தை கொண்டுவந்து இருக்கலாம். எதனால் கொண்டுவரவில்லை என்றால் இவர்களின் செய்கை , அரை, குறை என்பது நிரூபணம் ஆகி இருக்கும். நான் மேலே கூறிய அத்தனை குறைகளும் நிவர்த்திக்கப்பட்டு இருக்கவேண்டும். அப்பொழுதான் இந்த சட்டம் செல்லும். மோடியை பொறுத்த மட்டில் இது முக்கியமான வரலாற்று தருணம்.ஆனால் மக்களை பொறுத்தவரை , இச்சம்பவம் , மக்களை இரண்டாவது தடவையாக , ஆர் எஸ் எஸ் , பி ஜெ பி யினர் ஏமாற்றும் செயலாகும்." ஏமாற்றாதே , ஏமாற்றாதே ஏமாறாதே , ஏமாறாதே ".
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஜன-201908:03:15 IST Report Abuse
Srinivasan Kannaiya மேலும் 'நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் இது', இல்லை இல்லவே இல்லை 'சுத்தமாக ஓதுக்கிடையே எடுத்தால் அதுதான் நாட்டின் முக்கியமான வரலாற்று தருணம் என்று கூறலாம் '
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X