10 சதவீத ஒதுக்கீடு ஏன்? பிரதமர் விளக்கம்

Updated : ஜன 09, 2019 | Added : ஜன 09, 2019 | கருத்துகள் (46)
Advertisement
இட ஒதுக்கீடு, பிரதமர் மோடி, காங்கிரஸ், ரபேல்

சோலாப்பூர்: அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


நம்பிக்கை


மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக , பொதுவகுப்பில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முக்கியம். இந்த மசோதா சாமான்ய மக்களுக்கானது. இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவால், பாதிப்பு ஏற்படாது என்பதை அசாமில் உள்ளவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் உரிமைகள் சமரசம் செய்ய மாட்டோம்.


இடைத்தரகர் தலையீடு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தரகர் கலாசாரம் மேலோங்கி இருந்தது. ஆட்சியாளர்கள், ஏழைகளின் உரிமைகளை பறித்து, தேசத்தின் பாதுகாப்பில் விளையாண்டனர்.
விவிஐபிக்கள் பயணம் செய்வதற்கான ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், அதிர்ச்சி தரும் பல செய்திகளை விசாரணையின் போது கூறியுள்ளார். மீடியா தகவலின்படி, கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, அவர், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் மட்டும் தலையிடவில்லை. ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்திலும், தலையிட்டார். மீடியாக்களின் தகவலின்படி, மைக்கேல் வேறு சில நிறுவனங்களுக்காகவும் செயல்பட்டுள்ளார். ரபேல் ஒப்பந்தம் குறித்து கோஷம் எழுப்பும் தலைவர் மைக்கேல் உடனான தொடர்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.


விலைக்கு வாங்க முடியாது


அடிமட்டம் வரை ஊடுருவி உள்ள ஊழலை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். என்னை யாரும் விலைக்க வாங்க முடியாது. பயமுறுத்த முடியாது. இந்த பணியை செய்து முடிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
09-ஜன-201921:58:25 IST Report Abuse
Gideon Jebamani Mr. Modi, nobody can buy you, but you yourself pledge your allegiance to Ambanis and Corporate companies. You are a kind of paper tiger giving promises during election time and then workout your own aga. One simple example, construction of Ram temple is the BJP aga for the past three decades just to communal hatredness towards other faiths communities. Construction of house to all people, 15 lakhs of rupees deposit and what not your election time trs. Modi alone long live.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
09-ஜன-201920:41:28 IST Report Abuse
Visu Iyer பிரதமர் டிசம்பர் 30 வரையில் தானே மோக்கா (வாய்ப்பு) கேட்டார்.. இன்னமுமா இவரிடம் கேள்வி கேட்கவில்லை.. இன்னமுமா இவரை பதவியில் வைத்து இருக்கிறீர்கள் என்று தானே மக்கள் கேட்கிறார்கள்.. 10 % விளக்கம் எல்லாம் இப்போ எதற்கு
Rate this:
Share this comment
Cancel
09-ஜன-201919:56:46 IST Report Abuse
ஆப்பு அதெல்லாம் வெளீல சொல்லாதீங்க ஐயா...ரகசியத்தை பாதுகாப்பா வெச்சுக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X