இட ஒதுக்கீடு சட்டம்: கடைசி வரை ரகசியம் காத்த மோடி

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 09, 2019 | கருத்துகள் (82)
Advertisement
மோடி, இடஒதுக்கீட்டு சட்டம், ரகசியம், எதிர்க்கட்சிகள்

புதுடில்லி: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முடிவை கடைசி நிமிடம் வரை பிரதமர் மோடி ரகசியமாகவே வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புவதை தடுப்பதற்காகவே மோடி இவ்வாறு ரகசியம் காத்ததாகவும் கூறப்படுகிறது.


அமைச்சர்களுக்கும் தெரியாது:


புதிய இடஒதுக்கீடு முடிவு தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போன்ற சில அமைச்சர்களுடன் மட்டுமே மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். அறிவிப்பு வெளியிடும் வரை இந்த ஆலோசனை குறித்த தகவல் எங்கும் பகிரப்படவில்லை. ஜன.7ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்படும் வரை இடஒதுக்கீடு முடிவு கசிவதை மோடி விரும்பவில்லை.

சமூக மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தயாரிக்கும் பொறுப்பு முன்பே கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் வராதவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற யோசனை 6 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, சில அமைச்சர்களுடன் மட்டுமே மோடி ஆலோசித்துள்ளார்.

அதே சமயம் இந்த புதிய இடஒதுக்கீடு, ஏற்கனவே இருக்கும் எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதையும் மோடி தெளிவாக கூறி உள்ளார். ஜன.7ம் தேதி மோடி அழைப்பு விடுத்த அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு வரை எந்த அமைச்சருக்கும் இது குறித்து தெரியாது.

மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு, இடஒதுக்கீடு அனைவருக்குமானது, அனைவரின் வளர்ச்சிக்காக என விளக்கம் அளித்ததும் அமைச்சர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஒருவேளை தலித்கள் அல்லது ஓபிசி.,க்களின் இடஒதுக்கீட்டை நீர்த்துப்போக செய்யும் வகையில் பா.ஜ., இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி இருந்தால் எந்த கட்சியும் ஆதரித்திருக்காது. மற்ற இடஒதுக்கீடுகளை பாதிக்காத வகையில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததாலும், பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் குறித்து எந்த கட்சியும் கவலைப்படாத நிலையில் மத்திய அரசு இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததாலும் இது வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு தரப்பினருக்கு மட்டும் பயன் தருவதாக இருந்தால் அது எதிர்க்கட்சிகள் விமர்சிக்க வாய்ப்பாகி இருக்கும் என மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார். துவக்கத்தில் எஸ்.சி.,, எஸ்.டி., ஓபிசி பிரிவினர் மீது மட்டும் கருணை கொண்டவராக மோடி தன்னை காட்டிக் கொண்டாலும், தற்போது பிற பிரிவினரும் பயன்பெறும் வகையில் சட்டம் கொண்டு வந்துவிட்டார்.

இடஒதுக்கீட்டு பயனை பெறாத பிரிவினர், குறிப்பாக உயர்சாதி பிரிவினருக்கு உயர் கல்வி வாய்ப்புக்கள், வேலைவாய்ப்புக்களில் இடஒதுக்கீடு இல்லாததை குற்றமாக கூறி வந்தனர். அத்தகையவர்களின் கோரிக்கை தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் அதிகம் உள்ள பண்டிதர்கள், மராதா, ஜாட் இன மக்கள் தங்களையும் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரும்படி கேட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
10-ஜன-201910:35:08 IST Report Abuse
sripa வாழ்த்துக்கள் மோடிஜி . இது ஒரு வரலாற்று முக்கிய துவம் வாய்ந்த சட்டம். இதனால் உயர் வகுப்பினர் நல்ல பலன் பெறுவார்.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
10-ஜன-201910:25:46 IST Report Abuse
Meenu ஆட்சி முடியப்போகும் முன் செய்வதன் ரகசியம் என்னவோ. பிரமணர்களுக்காக கொண்டுவரப்பட்டது மாதிரி இருக்குது இந்த ஒதுக்கீடு. மக்கள் தொகையில் வெறும் மூன்று சதவீதம் இருக்கும் இவர்களுக்காக பத்து சதவீத ஒதுக்கீடு என்பது அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
10-ஜன-201909:07:11 IST Report Abuse
K.   Shanmugasundararaj பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அதிக எண்ணிக்கையிலும், எதிர்ப்பாக குறைவானவர்களும் கருத்து தெரிவித்து உள்ளார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியோர் யார்? 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உடையவர்கள் என்றால், வருமானவரி கட்டுவோர். அவர்களின் குழந்தைகள் தற்போதே தனியார் பள்ளிகளில் நன்கு படிக்கின்றனர். வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளனர். ஆக, உண்மையிலே கஷ்டப்படுவரின் குழந்தைகளுக்கு இந்த சட்டத்தால் பலன் கிடைக்காது. ஏனென்றால் முன்னேறிய சமூகத்தில், அதிகவருமானம் உடையவரின் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற்று அவர்கள் தான் இந்த பலனை அடைவர். மீண்டும், பொருளாதாரத்தில் நலிவுற்றோர், நலிவுற்றவராகவே இருப்பார். இது பொதுவானது. இட ஒதுக்கீடு என்பது, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக என்பதை கணக்கில் எடுக்க கூடாது. ஏனென்றால், ஒரே குடும்பத்தில், சகோதர, சகோதரிகளுக்கிடையே பொருளாதார ஏற்ற தாழ்வு உண்டு. இன்றைய பணக்காரன் நாளை ஏழை ஆகலாம். இன்றைய ஏழை நாளை பணக்காரன் ஆகலாம். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும். பின்தங்கியோருக்கும் சமுதாயத்தில் அந்தஸ்து / மரியாதை கிடைக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு / ரிசர்வேஷன் .ஒடுக்கப்பட்டோரும் , தாழ்த்தப்பட்டோருக்கு , பின்தங்கியோரும் இன்றும் முற்பட்ட வகுப்பினரின் வீடுகளில் உள்ளே செல்ல முடியாத நிலை , சமமற்ற நிலை உள்ளது.இவ்வளவு இட ஒதுக்கீடு வந்தபின்னரும் , மத்திய , மாநில அரசுகளின் செயலகங்களில் ( கொள்கை முடிவுகள் எடுக்கும் அலுவலகம் ) 100 க்கு 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் முன்னேறிய ( பார்வர்ட் ) சாதியினர் தான் உள்ளனர்.15 % தாழ்த்தப்பட்டோர் , 7 .5 %பழங்குடியினர் ,27 .5 % பிற பின்தங்கியோர் ( ஓ பி சி )இருக்கவேண்டும். ஆனால் இல்லை.இது தான் உண்மை .அன்று பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு செய்த மண்டல் கமிஷனை எதிர்த்தவர்கள் இந்த மோடி மற்றும் அவரது பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் காரர்கள்.இன்று இந்துக்கள் மிகுதியாக இருக்கும் மாநிலங்களில் - ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகியவற்றில் நடந்த சட்டசபை தேர்தலில் பல மோசடிகள் செய்த பின்னரும் தோல்வி ஏற்பட்டதால் ( மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் வோட்டு இயந்திரங்கள் ரோட்டில் கிடந்தன . மூன்று மாநிலத்திலும் மிக அதிக வாக்கு சாவடிகளில் போட்ட வோட்டை விடவும் அதிக வாக்குகள் இருந்தன.) அங்குள்ள முற்பட்ட வகுப்பினரின் வாக்குகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெற எடுக்கப்பட்ட ஒரு முடிவு தான். இதில் ரகசியமே இல்லை.6 மாதத்திற்கும் முன்பும் எடுக்கவில்லை . கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இது. இதே போன்ற தொரு முடிவு காங்கிரஸ் - நரசிம்மராவ் காலத்தில் எடுக்கப்பட்டு , அந்த முடிவுகள் / சட்டங்கள் உச்சநீதி மன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த சட்டத்தை விட இந்த சட்டம் உச்சநீதிமன்றம் கூறிய குறைகளை களைந்து இருந்தால் தினமலர், இரண்டு சட்டங்களுக்கிடையான வேறுபாட்டை சுட்டிக்காட்டலாம். மக்களிடம் ஒரு தெளிவு ஏற்படும். இந்த பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றால் முடிவு தெரிய ஆண்டுகள் பல ஆகும்.அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்து முடிவுகள் தெரிந்துவிடும்.தெரிந்தோ ,தெரியாமலோ மீண்டும் , இச்சட்டத்தினை கொண்டுவந்ததற்காக மோடி வந்து , உச்சநீதிமன்றம் சட்டத்தை செல்லாததாக்கி விட்டால் , கடந்த தேர்தலில் ஆளுக்கு 15 லட்சம் வாங்கி கணக்கில் போட்ட கதையாய் ( மக்கள் ஏமாந்த தாய் ) ஆகிவிடும்.இந்த சட்டம் , தாளில் சீனி என்று எழுதிய கதையாக ஆகும்.நடை முறை படுத்த முடியாத ஒன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X