அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம்; யாராக இருந்தாலும் கைது செய்வோம்: ஸ்டாலின்

Added : ஜன 09, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
தஞ்சாவூர்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே எனது முதல் பணி' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மை விட மக்களுக்கு அதிகம் உள்ளது. தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான மத்திய, மாநில
A.D.M.K,D.M.K,Jayalalithaa,M.K.Stalin,Stalin,அ.தி.மு.க,ஜெயலலிதா,தி.மு.க,ஸ்டாலின்

தஞ்சாவூர்: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே எனது முதல் பணி' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மை விட மக்களுக்கு அதிகம் உள்ளது. தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது தி.மு.க.,வுக்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும்.

நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதை பெற முடியும். லோக்சபா தேர்தலுடன் சட்டசபை அல்லது உள்ளாட்சி தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து, யாராக இருந்தாலும் கைது செய்வோம். ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. அதேசமயம் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்து தி.மு.க., முறையாக அறிக்கை கொடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
10-ஜன-201915:13:10 IST Report Abuse
DSM .S/o PLM இதுதானெனது முதல் பனி என்று இவர்பட்டியலிட்டுள்ள அனைத்தையும் இவரது குடும்ப வாரிசுகள் நினைவில் வைத்து கொள்ள வாழ்த்துக்கள். ஒருவேளை இவரது மகன், பேரன் அல்லது கொள்ளுப்பேரன் ஆட்சி அமைத்தால் அவர்கள் தனது முன்னோர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்.
Rate this:
Cancel
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
10-ஜன-201910:16:20 IST Report Abuse
அருண் பிரகாஷ் அதெல்லாம் ஒன்னும் இங்க பிரச்சனை இல்லை,உங்கள் பிரதமர் வேட்பாளர் திரு.ராகுல் அவர்களை மேகதாதுவில் அணை கட்ட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரே ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க,அது போதும் எங்களுக்கு ,உங்களை நம்பும் கொஞ்ச நஞ்ச சூடு சொரணை அற்ற கேடு கேட்ட ஜனங்களுக்கு கொஞ்சம் புரியும் உங்கள் சுயநல அரசியல்..
Rate this:
Cancel
Senthamizhsudar - Chennai,இந்தியா
10-ஜன-201900:09:09 IST Report Abuse
Senthamizhsudar முடியும் என்ற வார்த்தைக்கு முற்று புள்ளி வைக்காமல் முன்ஏறுங்கள் மோடி அவர்களே. மோடிபுகழ் தமிழகத்தில் தழைத்தோங்க வாழ்த்துக்கள். தமிழகத்தில் பரம்பரை ஆட்சி ஒழிய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X