பொது செய்தி

இந்தியா

சரியும் பெட்ரோல் விலை: வாய் திறக்காத டிவிகள்

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 09, 2019 | கருத்துகள் (75)
Share
Advertisement
பெட்ரோல், விலை, டிவி, மவுனம்

சென்னை : பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தபோது, அதை தலைப்புச் செய்தியாக்கி, விவாதங்கள் நடத்தி, அரசியல் கட்சி தலைவர்களிடம் பேட்டி கண்டு பூதாகரமாக்கின ஆங்கில டிவி சேனல்கள். தற்போது பெட்ரோல் விலை குறைந்துவரும் நிலையில், அது குறித்து சேனல்கள் வாயே திறக்காதது, நடுநிலை மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. புதிய விலை, தினமும் காலை 6 மணிக்க நடைமுறைக்கு வருகிறது.


ஊடகங்களில் தலைப்புச்செய்தி :


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணத்தினால், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிகரித்தது. சென்னையில், கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி , பெட்ரோல் லிட்டர் ரூ. 86.16க்கும், டீசல் ரூ. 80.04க்கும் விற்பனையானது. இந்த விலையுயர்வை, அப்போது ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கியது மட்டுமல்லாமல், விவாதங்கள் நடத்தியும், அரசியல் தலைவர்களிடம் பேட்டிகள் கண்டும் பரபரப்பாக்கின.


இறங்குமுகம் :


இப்போது பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்து வருகிறது. சென்னையில், இன்று ( ஜன. 09) நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71.07; டீசல் லிட்டருக்கு ரூ.65.70 ஆக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தபோது அதை பூதாகரமாக்கி செய்திகள் வெளியிட்ட ஆங்கில டிவி சேனல்கள், தற்போது பெருமளவு குறைந்துள்ள நிலையில், அது குறித்து வாயே திறக்கவில்லை. பெட்ரோல் விலையுயர்வு குறித்து போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளும் வாய்மூடி மவுனியாக இருக்கின்றன.


மதுரை பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறும்போது,


பெட்ரோல் விலை உயர்வின் போது, அதை பெரிதாக பேசிய ஆங்கில டிவி சேனல்கள், அதன் விலை குறைந்து வரும் நிலையில், இதுதொடர்பான செய்திகளையே வெளியிடுவதில்லை. இப்படி செய்வது அந்த சேனல்களின் நடுநிலைமை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சேனல்கள் வெளியிடும் எல்லா செய்திகளும் அப்படித் தானா என எண்ண வைக்கிறது என்றார்.


கர்நாடகாவில் விர்ர்...:


மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடக்கும் கர்நாடகாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அங்கு குமாரசாமி தலைமையிலான அரசு, பெட்ரோலுக்கான வரியை 32 சதவீதமும், டீசலுக்கான வரியை 21 சதவீதமும் அதிகரித்து உத்தரவிட்டது. காங்., ஆதரவுடன் செயல்படும் ஒரு மாநில அரசு, பெட்ரோல் விலையை உயர்த்தியது பற்றி ஆங்கில சேனல்கள் வாய் திறக்காமல், கல்லுளிமங்கனாக காட்சி அளிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜன-201913:28:20 IST Report Abuse
முக்கண் மைந்தன் TV & பத்திரிக்கைங்க ரண்ண்டும் BJP கட்டுப்பாட்டுலதான் இருக்கு - நாலேமுக்கா வருசமா...
Rate this:
Cancel
s.kannan - Kanyakumari,இந்தியா
10-ஜன-201912:42:52 IST Report Abuse
s.kannan கன்னையாவ காணோம்.
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
10-ஜன-201911:11:26 IST Report Abuse
narayanan iyer தேர்தலை மனதில் நிறுத்தி விலை குறைந்து வருகிறது . இன்றைய நிலையில் 35 ரூபாயில் விற்கவேண்டியது 71 ரூபாயில் விற்கிறார்கள் . எனவே ஊடகங்கள் வாய்திறக்க வில்லை . உலக அளவில் விலை குறைவதாலேயே குறைகிறது என்று சொல்வது அபத்தம் . ஏன் என்றால் ஐந்து மாநில தேர்தல் முடிந்த உடனே விலை ஏற தொடங்கியது ஊடகங்கள் சொன்னபிறகே விலையை குறைத்துக்கொண்டு இருக்கிறது கண் துடைப்பு நாடகம் .
Rate this:
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
11-ஜன-201907:17:00 IST Report Abuse
Varatharaajan Rangaswamyமுப்பத்தைந்து ரூபாயில் விற்க வேண்டியது என்று சொல்லிவிட்டால் போதுமா? மத்திய அரசு வரி எவ்வளவு, மாநில அரசுகளின் வரி எவ்வளவு என்றும், அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் என்றும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் மத்திய அரசு வாங்கும் வரியில் கிட்ட்த்தட்ட பாதியை மாநிலங்களின் வளர்ச்சிக்கே கொடுத்துவிடுகிறது மத்திய அரசு என்பதையும் சொல்ல வேண்டும் ஏற்கனவே எண்ணெய் மானியம் என்ற பெயரில் எண்ணெய் நிறுவனங்கள் சுமார் இரண்டு லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றதையும் அந்தக் கடனை தற்போதைய மோதி அரசு முழுமையாக அடைத்து முடித்துள்ளதையும் சொல்ல வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X