இடஒதுக்கீடு மசோதா: 10 முக்கிய அம்சங்கள்

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 09, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: இதுவரை இருந்த மத்திய அரசுகள் யாரும் செய்யத் துணியாத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற விஷயத்தை செய்து காட்டிவிட்டார் பிரதமர் மோடி. தேர்தலை மனதில் வைத்து தான் இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதற்கு பதில் அளித்த மோடி, ‛‛சில மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவில் எங்காவது ஏதாவது தேர்தல் நடந்து
10%,இடஒதுக்கீடு மசோதா,10 முக்கிய அம்சங்கள்

புதுடில்லி: இதுவரை இருந்த மத்திய அரசுகள் யாரும் செய்யத் துணியாத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற விஷயத்தை செய்து காட்டிவிட்டார் பிரதமர் மோடி. தேர்தலை மனதில் வைத்து தான் இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதற்கு பதில் அளித்த மோடி, ‛‛சில மாதங்களுக்கு ஒருமுறை இந்தியாவில் எங்காவது ஏதாவது தேர்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காக இடஒதுக்கீட்டை கொண்டு வராமல் இருக்க முடியுமா என்று கேட்டார். பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவுடன் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இம்மசோதா நிறைவேறியது.


மசோதா பற்றி 10 முக்கிய அம்சங்கள்

1.‛அரசியல் சாசன (124வது திருத்தம்) மசோதா 2019' என அழைக்கப்படும் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் கொண்டு வந்தார்.

2. நேற்று லோக்சபாவில் பெரும் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இன்று மகாராஷ்டிராவில் சோலாபூரில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பிரதமர், ‛‛ராஜ்யசபாவிலும் இதே போன்ற ஆதரவு மசோதாவுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். சிலருக்கு அநீ்தி இழைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். சந்தர்ப்பத்திலும் அனைத்திலும் சமத்துவம் கிடைக்க வேண்டும்' என்றார்.

3. மசோதாவை நிபுணர் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி, காங்., பிரச்னை செய்தது. காங்., கோரிக்கையை திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரித்தன.

4. ‛‛ஏழைகளின் நலனுக்கான இந்த மசோதாவை நிறைவேற்ற விடக்கூடாது என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன'' என்று பார்லி., விவகார அமைச்சர் விஜய் கோயல் குற்றம்சாட்டினார்.

5. ஆக்ராவில் ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, ‛‛தேர்தலுக்கு முன் மசோதாவை ஏன் நிறைவேற்றுகிறீர்கள் என சிலர் கேட்கின்றனர். நீங்களே சொல்லுங்கள்... எங்காவது, எப்போதாவது தேர்தல் நடக்காமல் இருந்தது உண்டா. பிறகு எப்போது தான் இடஒதுக்கீட்டை கொண்டு வருவது. அதனால் தான், மத்திய பொதுத் தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும்'' என நான் நினைக்கிறேன் என்றார்.

6. எதிர்க்கட்சிகளுக்கு உள்ளேயே பிரிவினை இருப்பதையும் இந்த மசோதா காட்டிக்கொடுத்து விட்டது. அகிலேசின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை காங்., கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டன.

7. டுவீட்டரில் பதிவிட்ட மோடி, ‛‛ஒவ்வொரு ஏழையும், எந்த ஜாதி, பிரிவாக இருந்தாலும், கவுரமான வாழ்க்கை வாழ வேண்டும். அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

8. புதிய இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை, அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை.

9. இந்த மசோதாவால், பெரும்பாலான பிராமணர்கள், ராஜ்புத்திரர்கள் (தாகூர்கள்), ஜாட்கள், மராத்தாஸ், பூமிகார், காபு மற்றும் கம்மவர்களுக்கு பயனளிக்கும்.

10. மற்ற மதங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் மசோதா பயன் அளிக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
10-ஜன-201912:19:09 IST Report Abuse
Krish Sami நான் இதனால் பயன் பெரும் பிரிவை சேர்ந்தவன் அல்ல. ஆனால், இது வரை வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த சலுகையும் இல்லாத, பொது பிரிவை சேர்ந்த ஏழைகளுக்கு வழி விடுதல் மிகவும் நேர்மையான செயலாகும். நரசிம்ம ராவ் , எம் ஜி ஆர் மாயாவதி மற்றும் கம்யூனிஸ்ட் அரசுகள் முன்னர் முயன்ற செயல்தான் இது. ஆதலால்தான் லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் சுலபமாக அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எப்போதுமே ஜாதி அரசியல் மட்டுமே செய்து வரும் தி மு க , பா ம க, இப்போதைய அ இ அ தி மு க போன்ற கட்சிகளுக்கு இந்திய அளவில் எந்த ஆதரவும் இல்லாதது மிகவும் ஆறுதலான செய்தி.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
10-ஜன-201910:42:56 IST Report Abuse
ganapati sb அணைத்து பிரிவு ஏழைகளுக்கும் அரசின் நல்லதொரு நடவடிக்கை . பிரதமரின் கேள்வி சரியானது . எப்போதும் எதாவது மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டுதான் உளது . மத்திய மாநில தேர்தல்களை இணைக்கவேண்டும்.
Rate this:
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜன-201906:02:07 IST Report Abuse
Ivan Low income nu poli cert vanguravan, caste poli cert vanga maatan a? 70 yrs a ivanunga luku othuki innum pichai edukurom nu solranunga, apparam enna ini yum pichai thane eduka poringa?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X