பழநி கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய உடையில், அமெரிக்க பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய உடையில், அமெரிக்க பக்தர்கள்

Added : ஜன 09, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 பழநி கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய உடையில், அமெரிக்க பக்தர்கள்

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி கோவிலில், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, அமெரிக்க பக்தர்கள், முருகனை வழிபட்டனர்.அமெரிக்காவைச் சேர்ந்த டாக்ல்ஸ்புருஷ் என்ற சுந்தரமூர்த்தி தலைமையில், 18 பேர், ஆன்மிக சுற்றுலாவாக, முருகனின் அறுபடை வீடுகளை தரிசிக்க, தமிழகம் வந்துள்ளனர்.இவர்கள் நேற்று, திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலுக்கு, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர். காவடி எடுத்து, வெளிப் பிரகாரத்தை வலம் வந்து, உச்சிக்கால பூஜையில், முருகனை தரிசனம் செய்து, போகர் சன்னதியில் வழிபட்டனர்.
சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஜெகநாதன் பாபு கூறுகையில், ''இவர்கள், 10 ஆண்டுகளாக, தைப்பூச விழாவில் பங்கேற்று வருகின்றனர். ''அறுபடை வீடுகளை தரிசித்து, மதுரை திருப்பரங்குன்றம் சென்று, கடைசியாக திருச்செந்துாரில் வழிபாட்டை முடிக்கின்றனர். நம் கலாசாரம் பிடித்து விட்டதால், சிலர் தமிழ் மொழியைக் கற்று வருகின்றனர்,'' என்றார்.



வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lokesh Raju - chennai,இந்தியா
10-ஜன-201920:19:17 IST Report Abuse
Lokesh Raju அவங்க புத்தி தெளிந்து , நம்ம கலாச்சாரத்துக்கு வராங்க , நாம புத்தி கெட்டு, அவங்க கலாச்சாரத்திற்கு மாறிட்டு வரோம்...
Rate this:
Share this comment
Cancel
hindustani - beijing,சீனா
10-ஜன-201910:05:51 IST Report Abuse
hindustani Hinduism is spreading all over the world esp. in Europe and America, Long live Hinduism and Tamil culture.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஜன-201908:45:04 IST Report Abuse
Srinivasan Kannaiya மத சம்பிரதாயங்களை கடைபிடிக்காத பினராய், பிந்து, மஞ்சு, கனகதுர்கா ஆகியவர்கள் வெளியே தெருவே வந்தால் பொதுமக்கள் செருப்படி முறத்தடி, கொடுத்து நரவல் அபிஷேகம் செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X