கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிலை கடத்தல் வழக்கு
அரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, சென்னையில் இடம் ஒதுக்காததற்கு, உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில், நீதித்துறை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டியது வரும் என்றும், எச்சரித்துள்ளது.

சிலை கடத்தல்,பொன் மாணிக்கவேல்,வழக்கு,அரசு, ஐகோர்ட்,கண்டிப்பு


சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, ஐ.ஜி.,யாக இருந்த பொன் மாணிக்கவேல் தலைமையில், தனிப்பிரிவு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்ற பின், இந்த வழக்குகளை விசாரிக்க, சிறப்பு அதிகாரியாக, உயர் நீதிமன்றம் நியமித்தது.

சென்னை, கிண்டியில் உள்ள அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதாகவும், நடுத்தெருவில் இருப்பதாகவும், சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். இதையடுத்து, விரிவான மனு தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு, நேற்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'

முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, சென்னையில் இடம் ஒதுக்கப்படவில்லை; உதவிக்கு, போலீசார் இல்லை என்கிற நிலையில், எப்படி செயல்பட முடியும்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி அலுவலகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. கிண்டியில் உள்ள அலுவலகத்தின் சாவியை, சிறப்பு அதிகாரி ஒப்படைத்து விட்டார். கிண்டியில், போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறேன்,'' என்றார்.

இதற்கு, பதில் அளிக்கும்படி, பொன் மாணிக்கவேலிடம், நீதிபதிகள் கேட்டனர். அவர், ''சென்னை அலுவலகத்தில், ஆறு ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். ஓய்வுபெற்ற பின், அலுவலகத்தில் இருந்த என்னை, இன்ஸ்பெக்டர் சந்தித்து, சாவியை கேட்டதால், கொடுத்து விட்டேன்,'' என்றார்.

உடனே, கூடுதல் அட்வகேட் ஜெனரல், ''சிலை தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பலரை, திருப்பி அனுப்பி விட்டார். அதற்கு, அவருக்கு அதிகாரம் இல்லை,'' என்றார்.


அதற்கு, நீதிபதிகள், 'ஓய்வுபெற்ற, டி.ஜி.பி.,க்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா' என, கேட்டனர். 'பணி நீட்டிப்பில், டி.ஜி.பி., உள்ளார். அவர், தற்போது பணியில் உள்ளார்' என, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தனிப்பிரிவுக்கு, அரசு தான் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதுவும், அரசின் ஒரு துறை தான். சென்னையில், அவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை, மாநில அரசு கையாளும் முறை, சரியாக இல்லை.

அப்படியென்றால், நீதித்துறை அவசர நிலையை பிறப்பிக்க நேரிடும். சிலைகள், புராதனப் பொருட்கள், நம் நாட்டின் சொத்துக்கள். அவற்றை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை. இவ்வாறு, நீதிபதிகள் கூறினார்.

பின், அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சிலை மாயமான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட, அறநிலையத் துறை அதிகாரி திருமகளுக்கு, மீண்டும் பணி வழங்கப்பட்டது குறித்தும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆவணங்கள் அழிக்கப்பட்டது தொடர்பான கோப்பு, பதிவேடுகளை தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
10-ஜன-201916:52:25 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>எல்லோருமே (ஆளும் அண்ட் ஆளாத ) பிராடுகளேதான் உழைக்காமல் என்றைக்கோ எந்தமன்னர்களோ செய்தவர்களை கோயில்நிலங்களை சூறையாடிய கூட்டங்களேதான் இந்த ரெண்டும் என்பதிலே சந்தேத்தமே வேண்டாம் கோயில் நிலங்களையே வியாபார சத்தலமாக்கினடாவாலும் இதுகளேதான் பல கோயில்களில் தீபம் ஏற்றக்கூட நாதியே இல்லே என்று இருக்கு ,பலமுறை காஞ்சிமஹா பெரியவர் சொன்னது இதுதான் நம்ம முன்னோர்களான மன்னர்கள் கட்டிய கோயில்களே சிதிலமான நிலையே இருக்கே அதை எல்லாம் ஆள்வோர் தான் செப்பணியிட்டு கும்பாபிஷேகம் செய்த்து வழிபாடுகளை நடத்தணும் என்று சொன்னார் ,

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
10-ஜன-201915:09:43 IST Report Abuse

PANDA PANDIஅரசுக்கு ஐகோர்ட் கண்டிப்பு. PEARUMAIYA IRUKU. CENTRAL KUUDA STATE SEANTHU NALLAVEA PANRAANGA. STATE THAPPU SENJA ATHU CENTRALUKU PANKU UNDOONNU ANAKKU ORU DOUBT.

Rate this:
10-ஜன-201913:36:14 IST Report Abuse

Murugeshsivan Bjp Oddanchatramதிருட்டு திராவிடம்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X