பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பயங்கரவாதத்துக்கு பாக்., ஆதரவு
ராணுவ தளபதி ராவத் எச்சரிக்கை

புதுடில்லி: ''பயங்கரவாதம், போரின் புதிய முகமாக மாறி வருகிறது; பயங்கரவாதத்தை ஆதரிப்பதை, தங்கள் கொள்கையாக சில நாடுகள் தொடர்ந்து பின்பற்றினால், பயங்கரவாதம், பல தலைகள் உடைய பிரமாண்ட அரக்கனாக உருவெடுக்கும்,'' என, இந்திய ராணுவ தளபதி, ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார்.

பகடைக்காய்:


தலைநகர் டில்லியில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்று, ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது: பாகிஸ்தான் போன்ற, வலிமை குன்றிய நாடுகள், பிற நாடுகளுக்கு அழுத்தம் தரும் நோக்கில், பயங்கரவாதிகளை பயன்படுத்தி, மறைமுக போர் நடத்தி வருகின்றன. இத்தகைய நாடுகளால், பயங்கரவாதம், போரின் புதிய முகமாக மாறி வருகிறது.

பயங்கரவாதத்தை பகடைக்காயாக பயன்படுத்துவதை, தங்கள் கொள்கையாக சில நாடுகள் தொடர்ந்து கடைபிடித்தால், பயங்கரவாதம், பல தலைகள் உடைய பிரமாண்ட அரக்கனாக உருவெடுக்கும்.

பயங்கரவாதத்துக்கு,பாக்., ஆதரவு,ராணுவ தளபதி,ராவத்,எச்சரிக்கை


தவறான தகவல்:


இத்தகைய கொள்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஜம்மு - காஷ்மீரில்

Advertisement

பயங்கரவாதம் பரவுவதற்கு, பாக்., அளித்து வரும் ஆதரவே காரணம். இங்கு, இளைஞர்களுக்கு தவறான தகவல்களை கூறி, அவர்களை, பயங்கரவாத பாதையில் ஈடுபடுத்துகின்றனர்.


சமூக வலைதளங்கள் மூலம், பயங்கரவாதத்துக்கு ஆதரவு திரட்டப்படுவதற்கு எதிராக, சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஜன-201908:31:26 IST Report Abuse

Srinivasan Kannaiyaபுத்தியுள்ள இளைஞர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள்..

Rate this:
blocked user - blocked,மயோட்
10-ஜன-201904:19:45 IST Report Abuse

blocked userபயங்கரவாதத்துக்கு உதவும் நோக்கத்தில் 2G மூலம் பல்லாயிரம் கோடிகளை ஒப்பந்தம் மூலம் பெற்றுத்தந்த அண்ணல் இராஜா அவர்களை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் CBI நீதிமன்றம் இருக்கும் வரை இந்திய இராணுவம் போல எத்தனை இராணுவம் வந்தாலும் தீவிரவாதிகளை உருவாக்கி அனுப்ப பாக்கிகள் தயங்கமாட்டார்கள்... தீவிரவாதம் செய்ய கொடுக்கப்படும் நிதியை ஒருபொழுதும் நமது இராணுவத்தால் தடை செய்ய முடியாது... கல்லெறிய வரும் நிதியையே நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X