பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில், ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னையில், 55 சதவீதத்துக்கும் மேல் மழை குறைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், குளிரும்
ஆறு ஆண்டுகளுக்கு பின் நடுங்க வைக்கும் குளிர்


சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில், ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னையில், 55 சதவீதத்துக்கும் மேல் மழை குறைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில், குளிரும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், சேலம் உள்ளிட்ட வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் சுற்றி உள்ள மலை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கடும் குளிர் நிலவுகிறது.

வால்பாறையில், மிக அதிகமான குளிர் நிலவுவதால், தரையில் உறைபனி ஏற்படுகிறது. அங்கு, சராசரியாக, 5 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலையே பதிவாகிஉள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, ஆறு ஆண்டுகளுக்கு பின், சென்னையில், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. இதற்கு முன், 2012ல், ஜன., 17ல், அதிக குளிர் நிலவியதால், 17.7 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை பதிவானது.

சென்னையின் புறநகர் பகுதிகளில், 18.2 டிகிரி செல்ஷியஸ் என்ற, குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. 'வரும் நாட்களை பொறுத்தவரை தொடர்ந்து குளிர் நிலவும்; வறண்ட வானிலை நீடிக்கும்' என, சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஜன-201909:08:33 IST Report Abuse
Natarajan Ramanathan 17,18 டிகிரி எல்லாம் ஒரு குளிரா? இங்கு டில்லியில் தற்போது ஐந்து டிகிரிதான்... மிகவும் சுகமாக இருக்கிறது.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஜன-201908:03:32 IST Report Abuse
Srinivasan Kannaiya அடாது மழை பொழிந்தாலும் பனி பொழிந்தாலும் சென்னை எப்பவுமே சென்னைதான், அது நிறம் மாறுவதில்லை
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
10-ஜன-201906:48:47 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஹாஹாஹாஹாஹாஹ ஐயா சி எம் அண்ட் இதர அமைசச்சருங்களே எதிரிகட்ச்சி VIP க்களே கேட்டுக்குங்கசாமி இனி என்று இல்லீங்க ரொம்பவே மாசமா குடிநீருக்கு லாட்டரி அடிக்குது சென்னை அண்ட் சுற்றுவட்டார என்பதுதான் உண்மை தெரியுமாங்க பலரும் லாறிலே வரும் தண்ணீரைநம்பியே வாழ்ந்துண்டுருக்கா என்பதும் உண்மை மறுக்கமுடியாது ஆனால் இந்த எல்லா மேற்படி வித் க்க்களெல்லாம் சுகமா சொகுசா வாழறாங்க என்பதும் உண்மை அவதிப்படுவது எல்லாம் இந்துக்களை நம்பி வோட்டுப்போட்டாங்களே அதுகளேதான் இந்த தண்ணீர் ப்ராப்லமாலேதான் நான் சென்னையை விட்டுட்டு 25வருஷம் முன்னாடியே ஓடினேன் கர்நாடகாக்கு, தண்ணீர்கஷ்டம் சென்னை வாசிகளுக்கு புதுசு இல்லீங்க எந்த ராசையால் வியாதியும் எதுவும் செய்யமாட்டான் என்று தெரிஞ்சுதான் எப்படியும் மழைவரும் என்று வானத்தையே நம்பி இருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X