Hardik Pandya responds to BCCI's show cause notice, expresses sincere regrets over his disrespectful comments | பாண்ட்யா கிளப்பிய சர்ச்சை: பி.சி.சி.ஐ. நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாண்ட்யா கிளப்பிய சர்ச்சை: பி.சி.சி.ஐ. நோட்டீஸ்

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (3)
 BCCI, Hardik Pandya,Lokesh Rahul, பாண்ட்யா,  பாண்ட்யா சர்ச்சை, பிசிசிஐ , ஹர்திக் பாண்ட்யா, வினோத்ராய் , லோகேஷ் ராகுல் , Pandya, Pandya controversy, Vinod Rai,

சிட்னி: வாழக்கையில் நடந்த அந்தரங்க விஷயங்களை டி.வி.நிகழ்ச்சியில் அப்படியே போட்டுடைத்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பி.சி.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சமீபத்தில் தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் சகவீரர் லோகேஷ் ராகுலுடன் பங்கேற்றார். அப்போது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டனர். இருவரும் தங்களது அந்தரங்க வாழக்கை குறித்து பெற்றோரிடம் விவாதித்ததாக வெளிப்படையாக கூறினர்.இரவுநேர விடுதிக்கு சென்றதாக பாண்ட்யா ஒப்புதல் தெரிவித்தார்.மேலும் பாலிவுட் நடிகைகள் சிலரை பற்றி வாய்க்கு வந்தபடி உளறினார். ராகுலும் தன் பங்கிற்கு பல கதைகளை கூறினார். இவர்களி்ன் ஓபன் டாக் கிரிக்கெட் அரங்கில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
பி.சி.சி.ஐ., நிர்வாக குழு தலைவர் வினோத்ராய் கூறுகையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் . 24 மணி நேரத்திற்குள் விளக்கம் தரவேண்டும் என்றார்.


மன்னிப்பு

ஆஸி.க்கு எதிராக ஒரு நாள் போட்டி12-ம் தேதி துவங்கவுள்ள நிலையில் பி.சி.சி.ஐ. அனுப்பிய நோட்டீசிற்கு விளக்கம் அளித்து பாண்ட்யா டுவிட்டரில் கூறியது,. வெளிப்படையான தன்மைக்கு ஏற்ப என்னை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். மற்றவர்கள் உணர்வை புண்படுத்தும் நோக்கில் கருத்து கூறவில்லை. யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X