பொது செய்தி

இந்தியா

உணவு செலவை குறைக்க 'ஏர் இந்தியா' புது திட்டம்

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (16)
Advertisement
Air India Food, Air India, Air India Flight, ஏர் இந்தியா, விமான பயணிகள் உணவு , ஏர் இந்தியா விமானம், மத்திய அரசு, ஏர் இந்தியா உணவு செலவு, Central Government,

புதுடில்லி, செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் விமானங்களில், பயணியருக்கு தேவையான உணவை, இந்தியாவில் இருந்து எடுத்து செல்ல, 'ஏர் இந்தியா' விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான, ஏர் இந்தியா விமான நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.சமீபகாலமாக, விமான நிறுவனங்களிடை யிலான போட்டி, விமான நிலைய பயன்பாட்டு கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஏர் இந்தியாநிறுவனத்துக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த, மத்திய அரசும், விமான நிறுவனமும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.ஏற்கனவே, உள்நாட்டு விமானங்களில், 'எகானமி' வகுப்பு பயணியருக்கு, அசைவ உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், விமான பயணியருக்கு வழங்கும் உணவுகளை கொள்முதல் செய்வதற்கு ஆகும் செலவை குறைக்க, விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், பிரதீப் சிங் கரோலா கூறியதாவது:
விமான பயணியருக்கு வழங்கப்படும் உணவுகளுக்காக, ஆண்டு தோறும், 600 - 800 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில், உணவுப் பொருட்களின் விலை, 34 மடங்கு குறைவு; சுவை அதிகம்.எனவே, நம் நாட்டில் இருந்து, வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் விமானங்களில், பயணியருக்கு தேவையான உணவு வகைகளை, நம் நாட்டிலேயே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் உணவுகள், குளிர்சாதன பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது, சூடுபடுத்தி தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201900:38:25 IST Report Abuse
Krishna ஏர் இந்திய விமானங்கள் பராமரிப்பு மிகவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. விமானத்தின் பைலட் திறமையினால்தான் ஓடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
10-ஜன-201914:03:39 IST Report Abuse
Nallavan Nallavan அதிக செலவுக்கும், நஷ்டத்துக்கும் காரணம் ஊழல் .....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,இந்தியா
10-ஜன-201912:09:56 IST Report Abuse
Natarajan Ramasamy இன்றக்கும் airindia வின் incabin சேவை மற்ற ஐரோப்பியன்,அமெரிக்கன்,gulf ஏர்லைன்ஸ் களைவிட நன்றே.வளைகுடா நாடுகளுக்கு monopoly ஆக சேவை செய்தபோது சரியான லாபத்தில் airindia ஓடியது . வளைகுடா நாடுகளுக்கான ROUTES ஐ,அந்த நாடுகளின் airlines களுக்கு தாரைவார்த்துக்கொடுத்த பின் AIRINDIA நஷ்டத்தில் ஓடுகிறது. தாரைவார்த்துக்கொடுத்தது காங்கிரஸ். முன்பெல்லாம் துபாய்-சென்னை UP & DOWN ECONOMY AIRINDIA டிக்கெட் Dhs 2750 /-,இன்று அதே வளைகுடா airlines இல் 1250Dhs .விலை பாதியாக குறைந்து இருந்தாலும்,வளைகுடா airlines எல்லாம் லாபத்தில் ஓடுகிறது. அவர்களின் முக்கிய பயணிகள் இந்தியர்களே.அவர்கள் partner ஏர்லைன்ஸ், HUB & SPOKES ,ஸிஸ்டெம்களை நன்றாக உபயோகிக்கிறார்கள்.அவர்களின் ONLINE டிக்கெட் புக்கிங் இன்டர்நெட் சைட் நொடியில், சுலபமாக புக்கிங் செய்யும்படி வேலை செய்கிறது. சரியான மேலாண்மை இருந்தால் AIRINDIA நஷ்டத்தில் போகவேண்டிய அவசியம் இல்லை.இந்தியா பயணிகள், இன்றும் airindia 10 % விலை அதிகமாக இருந்தாலும், airindia வயே தேர்ந்தெடுப்பார்கள்.
Rate this:
Share this comment
puratchiyalan - Nagercoil,இந்தியா
10-ஜன-201917:50:40 IST Report Abuse
puratchiyalanமுதல timing ல சேவை பண்ணனும்.. அதிலும் ஊழல் பண்ண கூடாது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X