8 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமா? மத்திய அரசு மறுப்பு

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (17)
Advertisement
8th std, Prakash Javadekar, New education policy,இந்தி, எட்டாம் வகுப்பு, பிரகாஷ் ஜவடேக்கர், புதிய கல்வி கொள்கை  ,  கஸ்தூரிரங்கன் , மத்திய அரசு , இந்தி மொழி , Hindi,  Kasturirankan, Central Government, Hindi Language,8 ம் வகுப்பு,

புதுடில்லி : புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8 ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியா முழுவதற்கு ஒரே மாதிரியான மற்றும் அறிவியல் சார்ந்த கல்வி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரிக்க கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டது. இந்த குழு மத்திய அரசிற்கு சில முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த பரிந்துரைகளின்படி, நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8 ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாகக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான அறிவியல் மற்றும் கணித பாடங்கள் அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று காலை பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கஸ்தூரிரங்கன் கமிட்டி பரிந்துரைத்துள்ள புதிய கல்வி கொள்கையில் வரைவு அறிக்கையில் எந்த மொழியை கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிடவில்லை. இது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-ஜன-201920:19:01 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எதையும் வேண்டாம் என்று தடுப்பது அறிவிலி தனம். விரும்புபவன் படிக்கனும் அதனால் வேண்டாம் என்பவன் படிக்கவே வேண்டாம் அவனை யாரும் படி என கட்டாய படுத்தல. தான் கெடுவதோடு நில்லாது வேண்டவே வேண்டாமென மற்றவன் விருப்பத்தை கெடுப்பது ஞாயமல்ல. அரசு எதிர்ப்பவனுக்கு மட்டும் அல்ல எதிர்க்காதவனுக்கும் தான். எல்லோர் நலனையும் பார்ப்பதுதான் நல்லரசின் கடமையாகும்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
10-ஜன-201921:02:55 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN சில சுயநல அரசியல் வாதிக்ள எதையும் கண்மூடி தனமாக பா.ஜ.க .கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்பதையே செயலாக தொழிலாக கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் ஆண்டால் இவ்வாறு இவர்களை எதிர்த்தால் இவர்களுக்கு எப்படி இருக்கும் எண்ணிப்பார்க்க நேரமில்லையா..அப்போது தங்கள் திட்டங்களை செயல் படுத்த முடியாமல் வேதனை படுவீர்கள் தானே. தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியின் சுகம்.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
10-ஜன-201916:57:41 IST Report Abuse
Viswam ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். CBSE , ICSE , IB மற்றும் ஸ்டேட் போர்டு இவர்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களை பார்த்தாலே தலை சுற்றுகிறது. ஒவொவருக்கும் ஒரு பாட திட்டம், தனியாக புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், அதிலும் பள்ளிக்கூடத்தில் எழுதுவதற்கு தனியாகவும், வீட்டில் எழுதுவதற்கு தனியாகவும், பிறகு, ஜாமெட்ரி box , கலர், ட்ராவிங் இத்தியாதிகள். இதற்கு மேலாக யூனிபார்ம், பெல்ட், பேட்ஜ், டை, ஷூ, சாக்ஸ், அதற்கும் அந்தஅந்த பள்ளிக்கூடம் சொல்லும் இடத்தில் வாங்கவேண்டும். சுமாராக 3 இலிருந்து 4 கிலோ வரை பிள்ளைகளும் பாரத்தை சுமக்கிறார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளின் படிப்பில் குறைவுவரக்கூடாதென்று வரவுக்குமீறி செலவு செய்து பிரைவேட் மற்றும் கான்வென்ட் பள்ளிக்கூடங்களை நாடுதல். ஒரு பிள்ளையின் படிப்பு செலவிற்கே கஷ்டப்படும் நிலையில், இரண்டு மூன்று பெற்றவர்களின் நிலையை யோசித்து பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு பிள்ளையின் ஒரு வருட படிப்பு செலவு மற்றும் ஸ்கூல் பஸ் சார்ஜ் சேர்த்தால் நம்மளை போன்றவர்கள் ஒண்ணாவது தொட்டு டிகிரி வரை படித்த செலவை தாண்டிவிடும் போலிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டினால், கீழ் நிலை படிப்பு உருப்படும். மேல் நிலை படிப்பிற்கோ இதற்கும் மேலாக சிக்கல்கள். எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை சீர்படுத்த. யார் வந்தாலும் பெற்றோர்களுக்கு சிரமம் தான், அரசியல் சார்ந்த குடும்பங்கள் கல்வித்துறையில் பணம் பண்ணுவதை நிறுத்தும் வரை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X