தமிழகத்தில் யாருடன் கூட்டணி? மோடி விளக்கம்

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 10, 2019 | கருத்துகள் (106)
Advertisement
Bharatiya Janata Alliance, PM Modi, Tamilnadu, தமிழகம், மோடி,  பிரதமர் மோடி , பாரதிய ஜனதா கூட்டணி,  காங்கிரஸ், ரபேல்,  பிரதமர் நரேந்திர மோடி , அதிமுக, திமுக, ரஜினி, பா.ஜ.,
Modi, Prime Minister Modi, Bharatiya Janata Party, BJP, Congress, Rafale, Prime Minister Narendra Modi, AIADMK, DMK, Rajini,

புதுடில்லி : தமிழகத்தில் அதிமுக, திமுக, ரஜினி இவர்களில் யாருடன் பா.ஜ., கூட்டணி அமைக்க உள்ளது என்ற கேள்விக்கு பிரதமர் மோடி விளக்கமான பதில் அளித்துள்ளார்.


வாழ்த்து

தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் தொகுதி பா.ஜ., நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது தமிழக மக்களுக்கு அவர் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


கதவுகள் திறந்துள்ளன


மேலும், தமிழகத்தில் யாருடன், பா.ஜ., கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜ.,வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பா.ஜ., செயல்படும். அரசியல் பிரச்னைகள் எத்தனை இருந்தாலும் வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணியே. மத்தியில் பா.ஜ., பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணியுடனே பா.ஜ., ஆட்சி அமையும். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பா.ஜ., தயாராக உள்ளது.


இடைத்தரகர் தொடர்பு


தொடர்ந்து பேசிய அவர், பொருளாதார நிர்வாகதிறன் இல்லாமை, ஊழல் தான் காங்.,ன் மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் சொந்த படையையே, காங்., சேதப்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக பாதுகாப்புத்துறையை புரோக்கர்களின் கூடாரமாக காங்., மாற்றி வைத்திருந்தது. பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் எப்போது நடக்கும் என்பதை கூட இடைத்தரகரான மைக்கேல் தெரிந்து வைத்துள்ளார். அரசு ஆவணம் தொடர்பான விபரங்கள் கூட தெரிந்து வைத்துள்ளார் என்றால், ரபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள் தாமதப்படுத்தி உள்ளார் என்றால் நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது. அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
14-ஜன-201920:03:29 IST Report Abuse
Darmavan கட்டுமர அடிமைகள் எதற்கும் நேராக பதில் சொல்ல துணிவும் இல்லை அறிவும் இல்லை.சுடலை ஏன் மேக தாது அணை கட்ட உதவும் காங்கிரஸை கண்டிக்கவில்லை.ஏன் அதை நிறுத்த சொல்லவில்லை.இதறகு பதில் என்ன? பச்சோந்திகள்
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
14-ஜன-201917:31:17 IST Report Abuse
அருண் பிரகாஷ் அணைகட்ட திட்ட வரைவு அனுமதி அளித்த பாஜக கெட்டவர்கள் என்றால்,அந்த அணையை கட்ட அனுமதி கேட்ட காங்கிரஸ் + மஜத நல்லவர்களா? திமுக காவடி தூக்கிகளே எங்கே உங்கள் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களை அணை கட்ட அனுமதி கேட்ட கர்நாடக அரசை கண்டிக்கிறோம் என்று ஒரே ஒரு வார்த்தை கூற சொல்லுங்கள்,வெட்கம் கெட்டதனமா கருத்துபோடுவதற்கு முன் உண்மையை உணருங்கள்.. மத்திய பாஜக அரசை கண்டிக்கிறோம் மாநில கூட்டணி அரசை கண்டிக்கிறோம் ரெண்டு வரி,சொல்ல சொல்லுங்கள்..இது வரை ஏன் கூறவில்லை,இனிமேலும் கூற மாட்டார்..பிரதமர் வேட்பாளர் ராகுல்ஜி கர்நாடக தேர்தல் பரப்புரையில் காவேரி தண்ணி கர்நாடகாவிற்கு மட்டும்தான் என்று கூறினார்,அப்போ இங்கு இருக்கும் உங்கள் தலைவருக்கு காதுசெவிடாய் போய் விட்டதா?பதில் கூற வேண்டாம்,வெட்கம்,மானம் சூடு சொரணை இருந்தால் சிந்தியுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
13-ஜன-201919:49:19 IST Report Abuse
yila "கழகங்கள் இல்லா தமிழகம்" பேசிய கட்சியின், கழகங்களிடம் கையேந்தும் நிலை, பரிதாபமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X