சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூளைக்கு ஒரு, 'பேஸ் மேக்கர்!'

Added : ஜன 10, 2019
Advertisement
மூளைக்கு ஒரு, 'பேஸ் மேக்கர்!'

இதயம் இயங்குவதற்குத் தேவையான மின் துடிப்புகள் சீராக இல்லை என்றால், அதை சீராக்க, 'பேஸ் மேக்கர்' கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, மூளையில் மின் அலைகள் தாறுமாறாக ஏற்பட்டு வலிப்பு வரும் போது, அதை சீராக்க, 'வாண்ட்' என்ற கருவியை, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மூளையில், எண்ணங்களை, உணர்வுகளை உருவாக்குவதில் மிக மெல்லிய மின் அலைகள், பெரும் பங்கு வகிக்கின்றன.
இந்த மின் அலைகள் தாறுமாறாகிவிட்டால், நோயாளிக்கு வலிப்பு ஏற்படுகிறது. வலிப்பு தாக்கும்போது, நோயாளிக்கு அருகே மருத்துவர் இருக்க முடிவதில்லை. இந்த சிக்கலை, வாண்ட் கருவி தீர்க்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
வாண்ட் கருவி, இரண்டு பகுதிகளைக் கொண்டது. மூளை மீது பதிய வைக்கும் உணரிகள் மற்றும் மின் முனைகள், தலையின் வெளிப்பகுதியில் பதிய வைக்கும் வாண்ட் கருவி.
உணர்வான்கள், மூளைக்குள், 128 இடங்களில் ஏற்படும் வலிப்பு அலைகளை துல்லியமாக உணர்ந்து, தலைக்கு வெளியே பதிக்கப்பட்டிருக்கும் வாண்ட் கருவிக்கு அனுப்புகிறது. இதன் மூலம், ஒரு நோயாளிக்கு எந்தவிதமான வலிப்பு வந்துள்ளது என்பதை, துல்லியமாக பதிவு செய்ய முடியும்.
வலிப்பு சமிக்ஞை வரும்போதே, வாண்ட் கருவி, மின் அலைகளை, மூளைக்குள் பதியப்பட்டுள்ள மின் முனைகளுக்கு அனுப்புவதால், நோயாளிக்கு வலிப்பை உடனே நிறுத்திவிட முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக, நோயாளிக்கு ஏற்ற வகையில் சிகிச்சை தரும் அறிவை, வாண்ட் கருவியிலுள்ள சில்லுக்கு தருவதற்கு, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X