உணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்!

Added : ஜன 10, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்!

ஒரு உணவுப் பொருள் கெட்டுவிட்டதா, இல்லையா என்பதை உறுதி செய்ய முடியாமல், 1.3 பில்லியன் டன் அளவுக்கு உணவுப் பொருட்களை, மக்கள் ஆண்டுதோறும் குப்பையில் கொட்டுகின்றனர்.
உணவு ஆய்வுக் கூடங்களில், ஒரு பொருள் கெட்டுவிட்டதா என்பதை கண்டுபிடிக்கும் கருவிகள் பல உண்டு.
ஆனால், காய், கனி, இறைச்சிகளை விற்கும் கடைகள், நுகர்வோரால் அந்த பெரிய கருவிகளை கையாள முடியாது. எனவே தான், ஜெர்மனியிலுள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கையடக்க அகச்சிவப்புக் கதிர் கருவியை உருவாக்கி உள்ளனர்.
மின்னணு உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதால், இந்தக் கருவியை, எவரும் கையாள முடியும்.
இந்தக் கருவி, உணவின் மீது அகச்சிவப்புக் கதிரை பாய்ச்சுகிறது. உடனே, அந்தக் கதிரின் பிரதிபலிப்பை திரும்ப வாங்கி, அலைவரிசை மாற்றத்தை ஒப்பிடுகிறது.
இதன் மூலம், அந்த உணவு உண்ணும் தரத்தில் உள்ளதா என்பதை, உடனே காட்டிவிடும். தக்காளி, மாட்டிறைச்சி ஆகியவை கெட்டுவிட்டனவா, இல்லையா என்பதை, கையடக்க அகச்சிவப்புக் கதிர் ஸ்கேனர் மூலம் துல்லியமாக சொல்ல முடிந்ததாக, பிரான்ஹோபர் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
எல்லா வகை உணவையும் சோதிக்கும்படி, ஸ்கேனரை மேம் படுத்த, ஆய்வுகள் தொடர்கின்றன

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X