பயங்கரவாதிகளால் மக்களுக்கு பாதிப்பு: ராணுவ தளபதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளால் மக்களுக்கு பாதிப்பு: ராணுவ தளபதி

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (13)
Advertisement
Indian Army, Army Commander Bipin Rawat, Terrorists, பிபின் ராவத், ராணுவ தளபதி, இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், ராணுவ தளபதி பிபின் ராவத், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் , இந்திய ராணுவம், 
Bipin Rawat, Army Commander, India, Pakistan, Kashmir, Separatist,

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: காஷ்மீர் சூழ்நிலையை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அங்கு ராணுவம் மென்மையான மற்றும் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். பயங்கரவாதிகளால், மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தெரியவந்துள்ளது. அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் வலிமையான சமுதாயமாக இருந்து, ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், எதனையும் சாதிக்க முடியும்.
ஆயுதங்களை போட்டுவிட்டு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டால், பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வன்முறையை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும். இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் , எல்லையில் காத்திருக்கின்றனர்.

இந்திய ராணுவம் எப்போதும், மக்களளை தாக்காது. ஆனால், அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். அவர்கள் எல்லை தாண்ட முயல்கின்றனர். இதனால், பொது மக்கள் யார், பயங்கரவாதிகள் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.

காஷ்மீர் இரண்டு நாடுகளுக்கு இடைப்ப்டட விஷயம். இதில், 3வது நாட்டின் தலையீடு தேவையில்லை. நமது விதிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டே பேச்சு நடக்கும். இதில் நாம் தெளிவாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
11-ஜன-201909:35:15 IST Report Abuse
oce தன் உறவினர்களை அடிக்கடி பார்க்க இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். அதற்கு பதில் இங்கிருக்கும் அவர்கள் உறவினர்கள் அங்கு சென்று அவர்களை பார்த்து வரலாமே.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
10-ஜன-201922:12:32 IST Report Abuse
Siva ஏன் சர் அரசியல் வாதி போல பேசி கொண்டு இருக்கீங்க... செய்ங்க... இல்ல அமைதியாக இருங்க...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-ஜன-201919:38:29 IST Report Abuse
Sanny அட்புதமான கண்டுபிடிப்பு, மக்களுக்கு பாதிப்பு ஏட்படுத்துவதுதான் பயங்கரவாதிகளின் பங்களிப்பு, பின்ன என்ன அரசாங்கத்துடன் அல்லது இராணுவத்துடன் மோதுவார்களா? மக்களுக்கு அடித்தால்தான் மக்கள் அரசுக்கு குரல் கொடுப்பார்கள்.இதுதான் பயங்கவாதிகளின் லாஜிக். இதெல்லாம் தெரியாம ஒரு தளபதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X