இளைய தலைமுறை இனிய தலைமுறையாக...

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement
இளைய தலைமுறை இனிய தலைமுறையாக...

இளைய தலைமுறை இனிய தலைறையாக


மருத்துவர் சிவராமன் வேண்டுகோள்


அது ஒரு மருத்துவம் தொடர்பான கருத்தரங்கு

ஒரு மூத்த மருத்துவர், ‛கனத்த இதயத்துடன் நான் இதைச் சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டு, ஒரு விஷயத்தை அதற்கான ஆதாரத்துடன் சொல்லி முடித்த போது எல்லோரது கண்களிலும் கண்ணீர்..

விஷயம் இதுதான்

நாம் வாழும் இந்த காலகட்டம் கொடிய காலகட்டம் நோய்களில் விதவிதமான தாக்குதல் காரணமாக பெற்றவர்கள் முன்னிலையிலேயே பிள்ளைகள் இறப்பு சதவீதம் கூடிக்கொண்டே போகிறது இது இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் அவரது செய்தி.

இதற்கு மேல் அவரது பேச்சைக் கேட்கும் திறனும் திராணியும் எனக்கு இல்லை என்று தனது வேதனையை பகிர்ந்து கொண்டார் சித்த மருத்துவர் டாக்டர் கு.சிவராமன்.

சென்னையில் நடந்துவரும் புத்தக திருவிழாவில் நலம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது

நவீன மருத்துவம்,கிரேக்க மருத்துவம்,சீன மருத்துவம்,இந்திய மருத்துவம்,இயற்கை மருத்துவம் என்று உலகில் உள்ள அனைத்து மருத்துவங்களும் ஒரே விஷயத்தைத்தான் போதித்து வந்தது.

அது நோயாளியை எப்படி அன்பு,அக்கறை மட்டும் கரிசனத்துடன் கவனித்து காப்பாற்றுவது என்பதுதான். அதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை ஆனால் எப்போது இதில் வணிகம் புகுந்ததோ அப்போதே இதன் உண்மை சரிந்துவிட்டது.

அவரவர் அவரவர் பாணியில் நோயாளிகளின் நோய் தீ்ர்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது ஒருவரை ஒருவர் குற்றம்சாற்றி கடித்து குதறும் வண்ணம் நடந்து கொள்கின்றனர் இதில் பாதிக்கப்படுவது பாவம் நோயுற்றவர்கள்தான்.

நன்றாக மென்று சாப்பிடு,பசி வந்தால் சாப்பிடு,ஒரு வேளை உணவு இயற்கைதானிய உணவாக மாற்றிடு ஒரு நோயும் வராது என்றால் யார் கேட்கிறார்கள் பிறகு சர்க்கரை நோய் வந்த பிறகு அதற்காக மாத்திரை சாப்பிடுகிறார்கள் இந்த மாத்திரை என்ன செய்கிறது நோயை குணப்படுத்துவது இல்லை அப்படியே பொத்திவைத்து வளர்க்கிறது.

உணவகத்தை தேடிப்போன காலம் மாறிப்போய் இப்போது உணவே வீடு தேடிவருகிறது ஆன் லைனில் உணவு புக் செய்து வாங்கி சாப்பிடும் பழக்கம் இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது இது மிகவும் ஆபத்து நான் இதைச் சொன்னால் நான் நவீனத்திற்கு எதிரி என்றும் புதுமைக்கு விரோதி என்றும் சொல்லி கேலி செய்கின்றனர்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் சில வருடங்களில் நமது உணவு என்பது பெரும்பாலும் இந்த உணவோட்டிகளால்தான் தீர்மானிக்கப்படும் உங்களை இதற்கு பழக்கப்படுத்திய பிறகு உங்கள் உடம்பி்ற்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உங்களிடம் விற்றுவிடுவர் நீங்கள் உளுந்தவடை கேட்டால் டொனால்ட் கொடுத்து சாப்பிட்டுபாருங்கள் என்பர் அதுவும் உருண்டையாகத்தானே இருக்கிறது என்ன நடுவில் ஒட்டைதான் இல்லை என்று சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்.

இந்த உணவு பழக்கம் பதினைந்து வயதில் இருந்து இருபத்தைந்து வயது உள்ள இளைஞர்களை இப்போது வசியப்படுத்திவிட்டது இந்த உணவுகளை சாப்பிடும் இவர்கள் முப்பது நாற்பது வயதிற்கு வரும்போது மிகவும் தளர்ந்து போய் எளிதில் நோய்தங்கும் கூடராங்களாகிப்போவர்.

கேன்சருக்கு கூட பயப்படாத நாம் இப்போது நான்கு நாள் காய்ச்சலுக்கு பயப்படுகிறோம் காரணம் உடனடி மரணம், நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்குள் அந்த நோய்க்கிருமிகள் தன்னை மேலும் புதுப்பித்துக் கொண்டு உலா வருகிறது.

பெற்றவர்கள் இருக்க பிள்ளைகள் சாவார் என்று சொன்ன அந்த பேராசிரியரின் கூற்று இப்படியெல்லாம் மெய்யாக வேண்டுமா? இந்த இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் மேற்கண்டவாறு மருத்துவர் கு.சிவராமன் பேசினார்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Moorthy - Chennai,இந்தியா
11-ஜன-201906:01:57 IST Report Abuse
V Moorthy டாக்டர் சிவராமன் அவர்களே, இன்றைய தலைமுறைக்கும், பெற்றோர்களுக்கும் நீங்கள் சொல்லும் அறிவுரைகள் "செவிடன் காதில் ஊதும் சங்கு" போல உள்ளது. மேலைநாட்டு கலாச்சாரம் நம்மை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணராமல் இருக்கின்றனர். எனது வீட்டில் கூட பழைசாதம் மோர் விட்டு தா என்றால் சிரிக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X