அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.,: அ.தி.மு.க., அறியாதது ஏனோ?

Updated : ஜன 10, 2019 | Added : ஜன 10, 2019 | கருத்துகள் (89)
Advertisement
இட ஒதுக்கீடு, அதிமுக, அ.தி.மு.க., மோடி, எம்ஜிஆர், பிரதமர், A.D.M.K,ADMK,M.G.R,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,எம்.ஜி.ஆர்.

சென்னை: ஏழைகளாக உள்ள உயர்ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அன்றே கனவு திட்டம் வைத்திருந்தார். ஆனால், இதை அவர் ஆரம்பித்த அ.தி.மு.க.,வினரே அறியாமல் இருப்பது தான் ஆச்சரியம்.
புதிய இடஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட போது, பேசிய துணை சபாநாயகர் தம்பித்துரை, ‛இந்த இடஒதுக்கீடு எங்களது தலைவர்கள் எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா கொள்கைகளுக்கு எதிரானது' என்றார். கட்சியில் ‛சீனியரான' அவருக்கு இடஒதுக்கீட்டில், எம்.ஜி.ஆர்., எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என்பது தெரியாதது ஆச்சரியம்.


எம்ஜிஆர் திட்டம்:

தமிழகத்தில் 1980 வரை பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதமாக இருந்தது. அதனை 50 சதவீதமாக மாற்றிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு என்றாலும், அவரது தனிப்பட்ட இடஒதுக்கீடு கொள்கை வித்தியாசமானது.

பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பிற்பட்டோரில் உள்ள ஏழைகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக 1979 ஜூலை 2 ல், முதல்வர் எம்.ஜி.ஆர்., ஒரு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவுப்படி ஆண்டு குடும்ப வருமானம் 9 ஆயிரத்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு சலுகை பெற முடியும். இது தான் அவரது திட்டம். ஆனால் பலத்த எதிர்ப்பை தொடர்ந்து இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.


புதுமை அறிவிப்பு



அதனை தொடர்ந்து ‛புரட்சித்தலைவர்' என்றழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., எந்த மாநிலங்களிலும் இல்லாத ‛புரட்சிகரமான' புதுமை அறிவிப்பை வெளியிட்டார். இது அரசு உத்தரவாக வெளியாகவில்லை. ஆனால் 1979 ஆகஸ்ட்டில் கடலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதனை அறிவித்தார்.


எம்.ஜி.ஆர்., அறிவிப்பு இதுதான்...

‛அடுத்த ஆண்டு முதல் கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்தல், வேலை நியமனம் போன்றவற்றில் உயர்ஜாதி வகுப்பினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, 50 சதவீத பொது கோட்டாவில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படும்'. இது தான் அவரது அறிவிப்பு.
இதனை தி.மு.க., தலைவர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். எம்.ஜி.ஆர்., உயர்ஜாதியை சேர்ந்தவர் என்பதால், உயர்ஜாதியினருக்கு ஆதரவாக அறிவித்துள்ளார் என்று விமர்சனம் செய்தார். எனவே எம்.ஜி.ஆர்.,தனது அறிவிப்பை செயல்படுத்தவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
16-ஜன-201914:00:51 IST Report Abuse
kumarkv MGR பிளானை நாசம் செய்தவர் ராமதாஸ்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
12-ஜன-201912:07:39 IST Report Abuse
bal மேல் ஜாதி என்ற வார்த்தையை உருவாக்கியதே இந்த திராவிடம்தான்...பெரியார் மற்றும் கட்டுமரம்தான் இந்த வார்த்தையை அரசியல் ஆதாயம் தேட உபயோகப்படுத்துகிறது....இனி பப்பு வேகாது...
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
11-ஜன-201922:30:17 IST Report Abuse
ராஜேஷ் மக்கள் தலைவரை மதிக்க தெரியாதவர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X