பொது செய்தி

இந்தியா

'ஆதார்' விபரங்களில் திருத்தமா? சேவை கட்டணம் திடீர் உயர்வு

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை,திருத்தம்,கட்டணம்,உயர்வு

புதுடில்லி: 'ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆதார்' எனப்படும், தனிப்பட்ட அடையாள அட்டையை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. ஆதார் மையங்களில், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி பதிவுடன், புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

அரசு மானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் பதிவு கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில், முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

'கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க, 100 ரூபாயும், ஆன்லைனில், இ - கேஒய்சி எனப்படும், தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை, 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கு, 30 ரூபாயும் செலுத்த வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
11-ஜன-201911:11:17 IST Report Abuse
J.Isaac ஒருவருடைய கைரேகை கருவிழியில் எப்படி மாற்றம் செய்ய முடியும் ?
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
11-ஜன-201907:07:03 IST Report Abuse
Subramanian Arunachalam Kattanam seluthiya pinbum thavarana thagavalgalai padhividum oozhiyargalai enna seivathu
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஜன-201906:43:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆப்பு வெச்சிட்டு, உள்ளே போகல்லைன்னு எண்ணைக்கும் காசு பிடுங்கும் மோசடி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X