இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜன 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று

ஜனவரி 11, 1966
லால்பகதுார் சாஸ்திரி: உத்தர பிரதேச மாநிலம், முகல்சராய் என்ற ஊரில், சாரதா பிரசாத் -- ராம்துலாரி தேவி தம்பதிக்கு, 1904, அக்., 2ல் பிறந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில், மத்திய போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு, வணிக மற்றும் தொழில் துறை, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

மத்திய ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள அரியலுாரில் நடந்த ரயில் விபத்தில், 144 பேர் பலியாகினர். விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து, சாஸ்திரி விலகினார். நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேரு, 1964ல் காலமானார். அவருக்கு அடுத்ததாக, லால் பகதுார் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் பதவியேற்று, இரண்டு ஆண்டுகளில், அப்போதைய சோவியத் யூனியனில் இருந்த, உஸ்பெகிஸ்தான், தாஷ்கென்ட்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், 1966, ஜன., 11ல் காலமானார். நாட்டின் இரண்டாவது பிரதமர், லால் பகதுார் சாஸ்திரியின் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-201906:56:20 IST Report Abuse
Bhaskaran ஒருமுறை திரைப்படத்துக்கு விருதுவாங்கசென்றிருந்த மெய்யப்பச்செட்டியாரை விருந்துக்கு அழைத்தார் அப்போதைய பிரதமரான சாஸ்திரி செட்டியார் மனைவி மரியாதையின் நிமித்தம் சாஸ்திரியின் மனைவிக்கு ஒருபட்டுபுடவை பரிசளித்தார் ஒன்றும்சொல்லாமல் பெற்றுக்கொண்டு விருந்துமுடிந்து ஹோட்டலுக்கு திரும்பிய செட்டியாரிடம் சாஸ்த்திரியின்ir டிரைவர் ஒருகவரையும் லேட்டரையும் கொடுத்தார் அதில் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் இம்மாதிரி அன்பளிப்புவாங்குவது சரியல்லையென்றும் அப்போதெமறுப்பது நாகரீகமில்லாததால் இப்போது திரும்பிக்கொடுப்பதாக கடிதத்தில் எழுதியிருந்தாராம் இவரன்றோ மனித புனிதன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X