பதிவு செய்த நாள் :
ராகுலுக்கு அழைப்பு;
மோடிக்கு இல்லை!

மும்பை: மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே மகனின் திருமண அழைப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட, பல மூத்த தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, அழைப்பு விடுக்கப்படவில்லை.

ராகுலுக்கு,அழைப்பு,மோடிக்கு,இல்லை!


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சிவசேனா கட்சியின் நிறுவனர், மறைந்த, பால் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இவரது மகன் அமித் தாக்கரேவுக்கு, 27ல், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் திருமணம் நடக்கஉள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு, திருமண அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உட்பட, பல மூத்த, பா.ஜ., தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. காங்., தலைவர் ராகுலுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனால்,

Advertisement

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன், காங்., கூட்டணி அமைக்கப் போவதாக பேச்சு எழுந்தது. 'திருமண அழைப்பிதழ் வழங்கியதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, காங்., தரப்பு விளக்கம் அளித்து உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிற்பி - Ahmadabad,இந்தியா
11-ஜன-201923:10:10 IST Report Abuse

சிற்பி மகிழ்ச்சி

Rate this:
kadhiravan - thiruvaroor,இந்தியா
11-ஜன-201922:29:11 IST Report Abuse

kadhiravanமோடியை சுத்திசுத்தி அடிக்கிறாங்க..,இது காலத்தின் கட்டாயம்.

Rate this:
balaji - chennai,இந்தியா
11-ஜன-201917:51:11 IST Report Abuse

balajiIf boo supports then poli crowd will shout that bbl is supporting religion parties. If religion parties ignore bbl, then these people praise raj Thakre. Ennangadaa ings nyayam

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X