பதிவு செய்த நாள் :
இடஒதுக்கீட்டை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டை,எதிர்த்து,உச்ச நீதிமன்றத்தில்,வழக்கு


சட்ட திருத்தம்:


பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா,

பார்லிமென்டில் நிறைவேறி உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து, சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பு மற்றும் டாக்டர் கவுசால் காந்த் மிஸ்ரா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது, சட்ட விரோதமானது. 'இட ஒதுக்கீட்டின் அளவு, 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த, 1973ல், உச்ச நீதிமன்றத்தின், 13 நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, 'இட ஒதுக்கீட்டில் திருத்தங்களை மேற்கொள்ள பார்லிமென்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடாது' என, கூறியுள்ளது.

Advertisement



தடை:


அதன்படி, தற்போது அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது. அதனால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஜன-201922:35:33 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஅளவில்லாமல் ஆளும் அரசு எடுக்கும் எல்லா செயல்பாட்டிற்கும் நீதி மன்றம் தலை இடுவதை தவிற்கலாம். மக்ளாட்சி என்பதின் தத்துவதின்படி எல்லாம் பெருளாதார அடிப்படையிலேயே கொண்டுவருதல் நலம்.ல அப்போதான் நல்ல நிர்வாகம்காணமுடியும். கடவுள் ஏன் ஜாதியை படைத்தான் தெரியாமலா. ஐந்து வகை தொழில் புரியவே. அதைவிட்டு தொழிலையே ஒழித்திட நினைப்பதும் எல்லோரும் ராஜாவாக நினைப்பதும் அபத்தமான செயல். ஒவ்வொரு அரசு பணிக்கும் தகுதி உண்டு திறமையானவனை தேர்வுசெய்தால் நல்லநிர்வாகம் அமையும் . ஜாதியை வைத்து சலுகை காட்டி தேர்வு செய்தால் நல் நிர்வாகம் காணமுடியாது. பூனை எலியைத்தான் பிடிக்கும். அப்படித்தான் கடவுள் படைத்துள்ளான். அது ஆட்டை பிடிக்க ஆசை பட்டால்அது ஆகாதகாரியம். இறைவன் படைப்புபடி வர்ணாசிரமதொழில் வளம்பெற செய்யவேண்டும் . அப்போதுதான் நாடு நல்ல திறமையாளர்களை கொண்டு நிர்வாகத்தை தரமுடியும். திறமையில் கல்வியில் எந்த விதத்திலும் தகுதியை குறைக்கவேகூடாது. கடவுள் ஏன் ஆண்பெண் எனப்படைக்கிறார் ஆணுக்கு பெண் எப்போது இணையாகவே முடியாது. ஆண் செய்யவேண்டியதை ஆண்தான் செய்யனும் பெண்செய்யவேண்டியதை பெண்தான்செய்யனும் அதுதான் நியதி. எப்படி எனில் அரசு உத்தியோகத்தில் எப்படி பணி உள்ளதோ அதுபோல். சம உரிமை எல்லாவற்றிலும் கேட்பது கூடவே கூடாது. பெண் பெண்ணிற்கு உண்டான வேலையையும் ஆண் ஆணுக்குண்டான வேலையையும் செய்து வாழ்ந்தால் மகிழ்வாக வாழலாம் நாடும் வன்முறை பூசல் குற்றங்கள் இல்லாமல் இயங்கும். யாருங்க சட்டத்தை கோர்டை மதிக்கிராங்க .கீழ்கோர்ட் மேல் கோர்ட் என்பதெல்லாம் குற்றவாளி தப்பிக்கவே . அண்ணல் காந்தி மகான் சொன்ன மாதிரி அந்தந்த கிராமத்திலேயே வழக்குகளை தீர்க்க வேண்டும். சோகுசு அறையில் தீர்வு காண்பது நியாயம் தெரியாது. மருத்துவம் கிராம புறங்களில் பார்க்க ஏன் மருத்துவர்கள் அதிகம் விரும்புவதில்லை. அதையும் மாற்றி கிராம புரங்களில் மருத்துவமனைகள் அதிகம் கட்டவேண்டும் . சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கக்கூடாது. சேவை மனம் வேண்டும். அப்போதுதான் நாடு நலம் பெறுங்க.

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஜன-201922:05:42 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇந்தியாவில் நடப்பது மக்கள் ஆட்சி. ஜனநாயக ரீதியாக மக்களால் மக்களுக்காக செயல்பட மக்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்து ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. ஆட்சியாளர்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு எதிரியாக இருந்து சீர் குலைக்க நினைத்து செயல்படும் சக்திகளுக்கு நீதி மன்றம் தலை இடுவது சரியாக தெரியல. நீதி மன்றமே எல்லாவற்றிர்க்கும் தலையிட்டு தீர்ப்பு அளிப்பதற்கு மக்களாட்சியே வேண்டாம். நீதி மன்றத்தையே ஆட்சியாளர்கள்தான் நிர்வகிக்கின்றனர். எனவே ஆடசியாளர் கொண்டுவரும் சீர் திருத்தங்களுக்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் பயன் பெற்று வரும் ஜாதிகளுக்கே சலுகை காட்டி வருவது எந்தவிதி சட்டம். பட்டினி கிடப்பவன் பசி ஆற்றுவது அரசின் கடமை. ஜாதியை பார்ப்பதல்ல ஜனநாயகம். இனி பொருளாதாரத்தில் பின் தங்கிவரகளுக்கே சலுகை என்ற நிலையை கொண்டு வரவேண்டும் .ஜாதியை ஒழித்திடல் வேண்டும்.அப்போதான் சம நிலை சமபயன் என்றாகும். நீதி மன்றம் இம்மேல்முறையீட்டூஇதை தள்ளுபடி செய்வேண்டும்.

Rate this:
spr - chennai,இந்தியா
11-ஜன-201920:05:55 IST Report Abuse

sprஇதுதான் சாக்கு என நீதிமன்றம் பொங்கல் பரிசு தீர்ப்பு போல அதிரடியாக எவருக்குமே ஒதுக்கீடு இல்லை ஆதார் - வருமான வரி இணைப்பின் மூலம் கணிணியைப் பயன்படுத்தி, உண்மையிலேயே பொருளாதார ரீதியில் மத, இன பாகுபாடின்றி ஒதுக்கீட்டை அமுல்படுத்த முடியும் என்பதால் அடுத்த இரண்டு மாதங்களில் அரசு அமுல்படுத்த வேண்டுமென தீர்ப்பு சொன்னால், முன் சொன்ன தீர்ப்புக்கள் அனைத்திலும் செய்த தவற்றை மன்னிப்போம்

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X