பதிவு செய்த நாள் :
சி.பி.ஐ.இயக்குநர் அலோக்வர்மா ராஜினாமா

புதுடில்லி: பதவியில் இருந்து நீக்கப்பட்ட சி.பி.ஐ.இயக்குனர் அலோக்வர்மா தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். புதிதாக வழங்கப்பட்ட தீயணைப்பு துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

சி.பி.ஐ., இயக்குனர்,அலோக் வர்மா,நீக்கம், ராஜினாமா

சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மத்திய அரசு, இருவரது பொறுப்புகளையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'சி.பி.ஐ., இயக்குனராக அலோக் வர்மா தொடரலாம். கொள்கை முடிவுகள் எதையும், அவர் எடுக்கக் கூடாது.

அவரது பொறுப்புகள் குறித்து, பிரதமர் தலைமையிலான, உயர்நிலைக் குழு, ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.


சி.பி.ஐ., இயக்குனராக, அலோக் வர்மா, நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி, ஏ.கே. சிக்ரி அடங்கிய உயர்நிலைக் குழு, கூட்டம், டில்லியில் நேற்றும் நடந்தது.சி.பி.ஐ., இயக்குனர் நீக்கம்இதில், 'சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, அலோக் வர்மாவை நீக்குவது' என, முடிவு எடுக்கப்பட்டது. அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு, பிரதமர் மோடி மற்றும் நீதிபதி, சிக்ரி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், கார்கே எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளஅலோக் வர்மா, தீயணைப்புத் துறையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

Advertisement

இந்த பொறுப்பை ஏற்க மறுத்த அலோக் வர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சி.பி.ஐ.,க்கு புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை, கூடுதல் இயக்குனர் நாகேஸ்வரராவ் இயக்குனர் பொறுப்பில் இருப்பார்.


இதற்கிடையே, தன் மீது லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, ராகேஷ் அஸ்தானா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த , டில்லி உயர் நீதிமன்றம், 10 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-201922:26:26 IST Report Abuse

ஆப்புசி.பி.ஐ தலைமை அதிகாரிக்கு தீயணைப்பு பதவியா...பிரதமர் பதவி போனா டீ ஆத்த போன மாதிரி இருக்கும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஜன-201921:00:02 IST Report Abuse

Pugazh Vகுழப்பாச்சாரிகளின் ஆட்சியில் இது மட்டுமல்ல இன்னும் தமாஷ்கள் நடக்கும். நாலஞ்சு வருடங்கள் சிபிஐ அனுபவம் உள்ளவருக்கு இனி தீயணைப்பு துறையாம். ஹா ஹா ஹா

Rate this:
rama adhavan - chennai,இந்தியா
11-ஜன-201918:43:32 IST Report Abuse

rama adhavanHis resignation/retirement will not be accepted by government as he is an accused in various cases. He will be more likely suspended on the day of his retirement to face enquiry against his alleged irregularities.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X