தியேட்டரில் திருமணம்: ரசிகர்கள் உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தியேட்டரில் திருமணம்: ரசிகர்கள் உற்சாகம்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement
தியேட்டரில் திருமணம்: ரசிகர்கள் உற்சாகம்

தஞ்சாவூர் : ரஜினி நடித்த பேட்ட படம் வெளியான தஞ்சாவூர் தியேட்டரில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம், தஞ்சாவூரில், சாந்தி மற்றும் ஜூபிடர் தியோட்டர்களில் நேற்று வெளியானது. காலை, 7:30 மணிக்கே ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில், திருக்காட்டுபள்ளியைச் சேர்ந்த ஜோதிராமன் - உஷாராணி ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க, முடிவு செய்தனர்.

நேற்று காலை, மணமக்கள், உறவினர்களுடன், படம் வெளியான சாந்தி தியேட்டருக்கு வந்தனர். தாலியை ரசிகர்கள் எடுத்து கொடுத்து, திருமணம் முடித்து வைத்தனர். மேலும், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். பின், மணமக்கள், ரசிகர்களுடன் பேட்ட படம் பார்த்தனர்.

மணமக்கள் கூறுகையில், 'ரஜினி பெயரில், எந்த செலவும் இல்லாமல், எங்களுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ரஜினி தான் கடவுள். எனவே, கோவிலுக்கு செல்லவில்லை. பேட்ட படம் பார்க்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201904:51:05 IST Report Abuse
Bhaskaran இதில் பெருமை என்ன வாழுகிறது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஜன-201920:57:05 IST Report Abuse
Pugazh V ஆன்மிக அரசியல். பாஜக நண்பர்களே, நாளைய பாஜக வின் நம்பிக்கை தரம்.. பார்த்து எழுதுங்கோ.
Rate this:
Share this comment
Cancel
Shan, Ngl -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜன-201919:57:27 IST Report Abuse
Shan, Ngl அப்போ எதுக்கு குத்து விளக்கேற்றி ஐயர வச்சு கல்யாணம் பண்ணீங்க? முட்டாள்தனத்தின் மொத்த உருவம். மத்த மாநிலங்களில் ‌சும்மா இல்ல தமிழன் கழுவி ஊத்துரது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X