லோக்சபா தேர்தல் பிரசாரம் குறித்து பா.ஜ., ஆலோசனை!| Dinamalar

லோக்சபா தேர்தல் பிரசாரம் குறித்து பா.ஜ., ஆலோசனை!

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019
Advertisement
லோக்சபா,தேர்தல்,பிரசாரம்,பா.ஜ., ஆலோசனை

புதுடில்லி: மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம், டில்லியில் இன்று(ஜன.,11) துவங்குகிறது. இந்தக் கூட்டத்தின்போது, விரைவில் நடக்க உள்ள, லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள், பிரசார யுக்திகள் வகுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் ஆட்சிக்காலம், அடுத்த சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, வரும், ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, கட்சிகள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில், மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை, பா.ஜ., இழந்தது.

இந்நிலையில், பொருளா தாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியுள்ளது; இது, பா.ஜ.,வுக்கு புத்துணர்வு கொடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.,வின் தேசிய கவுன்சில் குழு கூட்டம், டில்லியில் இன்று துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் தொடர்பான, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, இன்று உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாளை பேசவுள்ளார். இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: டில்லியில் நடக்கும் தேசிய கவுன்சில் கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு தயாராக, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எந்தெந்த பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட, பிரசார யுக்தி களும் இறுதி செய்யப்படும்.

சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், முற்பட்ட பிரிவினர் முழு ஆதரவு கிடைக்காததே, தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேறியுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், அது நடைமுறைக்கு வரும். இதன் மூலம், முற்பட்ட பிரிவினரின் ஆதரவு, கட்சிக்கு கிடைக்கும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்காக கமிஷன் அமைத்தது, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மீதான வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்தது போன்றவையும், கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவை பெற்றுத் தரும். சமூக நீதிக்காக போராடும் கட்சி என, தேர்தலில் பிரசாரம் செய்வோம். விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் வகை யிலும், மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் பிரசாரம் செய்வோம்.

'கடந்த தேர்தலின்போது, மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், பா.ஜ., 282 தொகுதிகளில் வென்றது. இந்த தேர்தலில், அதைவிட அதிக தொகுதிகளில் வெல்வோம்' என, அமித் ஷா கூறியுள்ளார். அந்த இலக்கை எட்டும் வகையில், லோக்சபா தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X