எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்டாயம்!
தேர்தலுக்கு தடையில்லா மின்சாரம்;
பணிகளை முடுக்கிவிடுமா வாரியம்?

கோடை வெயிலுடன், லோக்சபா தேர்தலும் வருவதால், தடையின்றி மின் வினியோகம் செய்ய, மின் சாதனங்களின் பராமரிப்பு பணிகளை, மின் வாரியம் முடுக்கிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தடையில்லா மின்சாரம்; பணிகளை முடுக்கிவிடுமா வாரியம்?


தமிழகத்தில், தற்போது, தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின் சாதனங்கள் பழுதால், மின் தடை தொடர்கிறது. இதற்கு, மின் சாதனங்களில், முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததே காரணம்.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், 2018 நவம்பரில் வீசிய, 'கஜா' புயலால், ஏராளமான மின் சாதனங்கள் சேதமடைந்தன. இதனால், மின் வாரியத்தின், கிடங்குகளில் இருந்த மின் கம்பங்கள், மின் கம்பி, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

கோடை காலத்தில் மின் தேவை, வழக்கத்தை விட அதிகரிக்கும். இந்த கோடையில், பள்ளி பொதுத் தேர்வுடன், லோக்சபா தேர்தலும் நடக்க உள்ளது. இதனால், தற்போது, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ள மின் தேவை, ஏப்., மே மாதங்களில், 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மின்சாரம் கிடைத்தாலும், வினியோகம் செய்வதற்கு, கூடுதல் மின் வழித்தடங்கள்

Advertisement

இருக்க வேண்டும். மேலும், ஏற்கனவே உள்ள, மின் வழித்தடங்களில், 'ஓவர் லோடு' காரணமாக, பழுது ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, அந்த பணிகளை, மின் வாரியம், உடனடியாக துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
11-ஜன-201906:27:01 IST Report Abuse

Manianஅமெரிக்க போன்ற நாடுகளிலும் மின் தட கோபுரங்கள் புதுப்பிக்கப்படாதால், அமெரிக்க எங்கும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதில்லை என்று ஒரு செய்தி கூறுகிறது. மின்சாமம், எறிக்க விறகிற்காக காடுகள் அழிவதை தடுக்கும். எரிபொருளாகவும் பயன்படும் (மின்சார அடுப்பு). மின்சார வாகனங்கள் மாசு காட்டு பாற்றை ஏற்படுத்தும்,. மின்சரம் இல்லாத உலகே இருக்காது. ஆனால், கடல் காற்று,மலையிடை காற்று வழியே, சூரிய சக்தி வழியே வரும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் பாட்டிகரிள், ஆஸ்திரேலியா, யூரரா்பாவிலல் சில நாடுகளில் உளள்ளது நம்மிடம் இல்லை. அதற்கு காப்புரிமை பெற்றவர்கள், இலான்மஸ்க் போன்றவர்கள் அதை இந்தியாவில் உற்பத்தி செய்ய தயாரில்லை. உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாடு பூராவும் பரவலாக எடுத்து செல்ல உயர் அழுத்த மின் கோபுரங்கள் மிக மிக தேவை.அதற்கு வழி விடாத விவசாயிகளுக்கு அரசாங்கம் எந்த உதவிஉ்ம்-கடன் இலவச மின்சாரம், தண்ணீர், இட ஒதுக்கீடு எதுவுமே தரக்கூடாது. எதிர்கட்சிகள் சொந்தபணத்தில் அவர்களை காப்பாற்றட்டும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X