சமாஜ்வாதியில் சேர மாட்டேன்: ஷிவ்பால்| Dinamalar

சமாஜ்வாதியில் சேர மாட்டேன்: ஷிவ்பால்

Added : ஜன 11, 2019
Advertisement
சமாஜ்வாதியில் சேர மாட்டேன்: ஷிவ்பால்

லக்னோ, :''சமாஜ்வாதி கட்சியில், மீண்டும் சேரும் எண்ணம் எதுவுமில்லை,'' என, மதச் சார்பற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர், ஷிவ்பால் யாதவ் தெரிவித்து உள்ளார்.சமாஜ்வாதி கட்சி நிறுவனர், முலாயம் சிங் யாதவின் சகோதரரும், உ.பி., முன்னாள் முதல்வரும், அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான, சிவ்பால் யாதவ், அக்கட்சியில் இருந்து விலகி, மதச் சார்பற்ற சமாஜ்வாதி என்ற கட்சியை துவங்கியுள்ளார்.ஷிவ்பால் சிங் நேற்று கூறியதாவது:உத்தர பிரதேச மாநிலத்தில், மதச் சார்பற்ற சமாஜ்வாதி கட்சிக்கு, மக்களிடம் ஆதரவு உள்ளது. லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடத் தயாராக உள்ளோம்.எங்களது ஆதரவு இல்லாமல், மத்தியில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. சமாஜ்வாதி கட்சியில், மீண்டும் இணையும் எண்ணம் எதுவும் இல்லை. ஒருவேளை, கொள்கை ரீதியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், அக்கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சு நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X