அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி ஊடகங்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (25)
Advertisement
 தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி ஊடகங்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருச்சி:''தி.மு.க.,வில் குழப்பதை ஏற்படுத்தும் முயற்சியில், ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன,'' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., சார்பில், திருச்சி, மணப்பாறை அருகேயுள்ள சீகம்பட்டி, நவலுார் குட்டப்பட்டு கிராமங்களில் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பங்கேற்று, பேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் நடத்த, அ.தி.மு.க., அரசு முன்வரவில்லை. இதனால், தி.மு.க., சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டு வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், குறைகள் களையப்படும்.ஊடகங்கள் திட்டமிட்டு, தி.மு.க.,வை ஒழிக்க பிரசாரம் செய்து, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதை முறியடிக்கவே, கிராம சபைக் கூட்டங்களை கூட்டி வருகிறோம்.

நான், 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து வருகிறேன். தற்போதைய ஆட்சி போல், ஒரு கேடு கெட்ட ஆட்சியை பார்த்தது இல்லை. ஜெ.,யால் இந்த ஆட்சி ஓடிக் கொண்டுள்ளது. எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள், கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், ஜெ., 'மாஸ் லீடர்' என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தி வரும் ஆட்சியாளர்கள், கொள்ளை அடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மறைப்பு

தஞ்சாவூர் அருகே, மாதாகோட்டை பஞ்சாயத்தில், நேற்று முன்தினம், ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு முன், கடைத் தெருவில் அமைக்கப்பட்ட, தி.மு.க., கொடிக் கம்பத்தில் ஸ்டாலின் கொடியேற்றினார்.முன்னதாக, கொடிக் கம்பம் அமைக்கும் போது, அருகில் இருந்த பச்சை மரத்தை வெட்டி, கொடிக் கம்பமாக, தி.மு.க.,வினர் நட்டனர். மரம் வெட்டிய இடத்தை, சாக்கு மூலம் மறைத்து விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
11-ஜன-201918:10:08 IST Report Abuse
K. V. Ramani Rockfort ஜெ.,யால் இந்த ஆட்சி ஓடிக் கொண்டுள்ளது. எங்களுக்குள் மாறுபட்ட கருத்துகள், கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், ஜெ., 'மாஸ் லீடர்' என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் உண்மையை இப்போதாவது சொல்கிறாரே, ஸ்டாலின். திருந்திவிட்டாரோ ?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
11-ஜன-201917:22:36 IST Report Abuse
 nicolethomson பாதி பத்திரிக்கை உங்களோடது மற்றும் உங்க பினாமிங்க தானே
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
17-ஜன-201913:57:52 IST Report Abuse
THENNAVAN2 ஜி க்கு பிறகு இந்தியா முழுவதும் காங்கிரசும்+தி மு க உம் சரிபாதியாக டிவி மற்றும் பத்திரிகை வாங்கியாச்சு .ஹிந்து தமிழ் போடும் செய்திகள் அனைத்தும் முரசொலி எடிட்டரால் தொகுக்கப்படடதே.ஒரிஜினல் ஹிந்து அழிந்துவிட்ட்து....
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
11-ஜன-201917:07:24 IST Report Abuse
metturaan . நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், குறைகள் களையப்படும்.... அப்போ... தற்போதைய பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தி மு க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யமட்டுமே தேர்ந்தெடுக்க பட்டிருக்காங்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X