2018ம் ஆண்டில் 189 லஞ்ச வழக்குகள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2018ம் ஆண்டில் 189 லஞ்ச வழக்குகள் பதிவு

Added : ஜன 11, 2019
Advertisement

மதுரை:தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில், 10 ஆண்டுகளை விட, கடந்த ஆண்டு தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லஞ்சம் வாங்கியதாக, 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 103 பேருக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுஉள்ளது.

அரசு சேவையை செய்து கொடுக்க, லஞ்சம் பெறுவது, அரசு பணிகளை ஒப்பந்தம் விட, லஞ்சம் பெறுவது போன்றவை தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தவிர, அரசு துறையில், ஊழல் குறித்து நேரடியாகவும், தபால் மூலமாகவும் புகார்கள் பெறப்படுகின்றன. இதன் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.

கடந்த, 2017 - 18ம் ஆண்டில், 415 புகார்கள் பெறப்பட்டு, விசாரிக்கப்பட்டன. 90 புகார்கள், முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.மேலும், 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. லஞ்சம் வாங்கியதாக, 106 பேர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்தாண்டு தான், அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 103 பேருக்கு தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, லஞ்சம் வாங்கியதாக, வருவாய் துறையினர், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரண்டாம் இடத்தில் மின் வாரியம் உள்ளது. ஒயர்மேன் முதல் உதவி பொறியாளர் வரை, எட்டு பேரும், மூன்றாம் இடத்தில் உள்ள போலீஸ் துறையில், ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை, ஏழு பேரும் கைதாகி உள்ளனர்.கல்வித் துறை, நகரமைப்பு பிரிவு, உள்ளூர் திட்டக் குழுமம், தொழில் மற்றும் அக்கவுன்ட்ஸ், வீட்டு வசதி கழகம், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கியதாக, தலா, மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர் நலத் துறை, டவுன் பஞ்., சமூகநலம், டாஸ்மாக், கருவூலம், பொதுப்பணித் துறையில், தலா இருவர் கைதாகி உள்ளனர்.கூட்டுறவு, சிறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சர்வே துறை, விவசாயம், ஊரக வளர்ச்சி, பொது சுகாதாரம், ஆதிதிராவிட வீட்டுவசதி கழகம், மீன்வளத் துறையில், தலா ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X