கந்துவட்டி கும்பலால் பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி கும்பலால் பாதிப்பு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் சமீப காலமாக கந்துவட்டி கும்பலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.திருப்புவனத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு சிறு சிறு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். முதலீட்டிற்காக வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என பல வகைகளிலும் கந்துவட்டி கும்பல் அப்பாவிகளை மிரட்டி வருகின்றனர். வட்டி பணம் தரவில்லையென்றால் அவதுாறாக பேசுவது, வீட்டினுள் அடியாட்களுடன் நுழைந்து தகராறு செய்வது போன்ற அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்த பெண் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு மேல் வசூலித்தும் அவதுாறாக பேசியதால் வாட்ஸ்ஆப்பில் வாக்குமூலம் பதிவு செய்து விட்டு பூச்சி மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்பெண் வாட்ஸ்ஆப்பில் பேசியது வைரலாகி வருகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் கூறியதாவது: எனது அம்மா திருப்புவனம் புதுார் மற்றும் லாடனேந்தலைச் சேர்ந்தவர்களிடம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கினார். வட்டியுடன் இதுவரை ஏழு லட்ச ரூபாய் திரும்ப செலுத்தியும் அக்கும்பல் வீடு புகுந்து அவதுாறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததால், அம்மா பூச்சி மருந்தை குடித்துவிட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம், திருப்புவனம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கந்து வட்டி கொடுப்பவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதோடு அவர்களது உறவினர்கள் போலீசாக இருப்பதால் புகாரை வாங்கவே மறுத்துவிட்டனர். மேலும் தொடர்ந்து மிரட்டி வருவதால் நாங்களும் மருந்தை குடித்து விட்டு சாக வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார். கந்து வட்டி கும்பலால் சிறு வியாபாரிகள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கந்து வட்டி கும்பலுக்கு போலீசாரும் துணை போவதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X