வாகனம் ஓட்டியதில் விதிமீறல் 15 ஆயிரம் லைசென்ஸ் சஸ்பெண்ட்..,,.,.| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகனம் ஓட்டியதில் விதிமீறல் 15 ஆயிரம் லைசென்ஸ் சஸ்பெண்ட்..,,.,.

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகங்கை:மாவட்டத்தில் 2018 ல் நடந்த 863 சாலை விபத்துக்களில் சம்பவ இடத்திலேயே 244 பேர் பலியாகியுள்ளனர். விதி மீறியதாக 15,589 வாகன ஓட்டிகளின் லைசென்சை போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.சந்து பொந்தெல்லாம் திறந்திருக்கும் மதுக்கடைகள், ரோட்டோர திறந்தவெளி பார்களால் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து, போதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்களும் அதிகரிக்கின்றன. போலீசார் என்னதான் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தாலும் அஜாக்கிரதையால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.கடந்த 2018 ல் மாவட்ட அளவில் நடந்த 863 சாலை விபத்துக்களில் 244 பேர் பலியாகியுள்ளனர். கொடுங்காயத்தால் 27, சிறு காயத்தால் 435 பேர் பாதித்துள்ளனர். இது போன்று விதிகளை மீறி வாகனம் ஓட்டியோர், மது அருந்தி வாகனம் ஓட்டியோர் உட்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 589 பேர்களின் லைசென்ஸ்களை போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இது போன்று நீர்ஆதாரத்தை பாதிக்கும் விதத்தில் வைகை, நாட்டார்கால்வாய் ஆறுகளில் திருட்டுத்தனமாக மணல் கொள்ளை நடக்கிறது. இது போன்று பல்வேறு வழிப்பறி, வீடுகளில் கொள்ளை சார்ந்த சம்பவங்களை குறைத்து, கட்டுக்குள் வைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.எஸ்.பி., ஜெயச்சந்திரன் கூறியதாவது: வாகன விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, முக்கிய ரோடுகள், தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கிராம சாலைகளில் வேகத்தடை அமைத்துள்ளோம். காரைக்குடி - குன்றக்குடி ரோடு, தஞ்சாவூர்-- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை ரோடுகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க 'ஒளிரும் விளக்குகள்' பொருத்தியுள்ளோம். கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ல் 65 சதவீத திருட்டுக்கள் கண்டறிந்து 81 சதவீத பொருட்களை மீட்டுள்ளோம். ரவுடிபட்டியலில் இருந்தவர்களை 10 ஆண்டாக கண்காணித்ததில் நன்னடத்தை அடிப்படையில் 51 பேரை ரவுடி பட்டியலில் இருந்து விடுவித்துள்ளோம். 2018ல் மட்டுமே 'வாரன்ட்' நிலுவை வழக்கு குற்றவாளிகள் 3,729 பேர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X