முல்லை பூ செடிகள் பராமரிப்பு பணி பூஜையுடன் விவசாயிகள் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முல்லை பூ செடிகள் பராமரிப்பு பணி பூஜையுடன் விவசாயிகள் துவக்கம்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 முல்லை பூ செடிகள் பராமரிப்பு பணி பூஜையுடன் விவசாயிகள் துவக்கம்

திருத்தணி:முல்லை பூ செடிகள் பராமரிக்கும் பணிகளை விவசாயிகள், சிறப்பு பூஜைகளுடன் நேற்று துவக்கி உள்ளனர்.

திருத்தணி தாலுகாவில், பட்டாபிராமபுரம், விநாயகபுரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம், தாழவேடு, தும்பிகுளம், தரணிவராகபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், அதிகளவில் விவசாயிகள் பூ பயிரிடுகின்றனர்.இதில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், முல்லை பூ பயிரிட்டு பராமரித்து வந்தனர்.

இந்த முல்லை பூ செடி, ஆண்டில், 9 மாதங்கள் பூக்கள் பூக்கும். மீதமுள்ள மூன்று மாதங்கள் பூ செடிகளை வெட்டி பராமரித்து, ஏர் உழுது, உரங்களை போட வேண்டும். அதாவது, ஜனவரி மாதம் முதல், மார்ச் மாதம் கடைசி வரை, முல்லை பூ பூக்கள் வராது. காரணம் பனி மூட்டம் அதிகளவில் இருப்பதால் பூக்கள் மலராது.ஆகையால், விவசாயிகள், ஜனவரி மாதம், முல்லை பூ செடிகளை வெட்டி சுத்தம் செய்தும், ஏர் உழுது சீரமைப்பர்.

இப்பணியில் ஈடுபடும் போது, விவசாயிகள் முல்லை செடிகளுக்கு, சிறப்பு பூஜைகள் செய்த பின், செடிகளின் தேவையில்லாத கிளைகளை வெட்டி சீரமைத்து பராமரிப்பர்.அதற்காக தற்போது விவசாயிகள், முல்லை செடிகள் வெட்டி பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-201905:46:41 IST Report Abuse
Bhaskaran செய்யும் தொழிலேதெய்வமென்ற செயல்பாடுதான் மென்மேலும் வளர்ச்சித்தரும் வாழ்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X