அமைப்பதோடு சரி! செயல்படாத டிராபிக் சிக்னல்கள் விபத்துக்களுக்கு பெரும் வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பதோடு சரி! செயல்படாத டிராபிக் சிக்னல்கள் விபத்துக்களுக்கு பெரும் வாய்ப்பு

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் நகர் புறங்களில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாமல் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளதோடு விபத்துக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.மாவட்டத்தில் கிராமப் பகுதிகளை விட நகரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பெரிய நகரங்களுக்கு செல்கின்ற அனைத்து பஸ்களும் இங்குதான் வந்து செல்லும். பல்வேறு பணி நிமித்தமாக மக்கள் டூ வீலரில் வந்து செல்வர். இது தவிர சரக்கு வாகனங்கள் போக்குவரத்தும் நகரங்களில் அதிகளவில் இருக்கும். அதிகளவில் வாகனங்கள் வந்து செல்வதால் நகரங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட ரோடு சந்திக்கும் இடங்களில் டிராபிக் சிக்னல் அமைத்துள்ளனர். சிக்னல் அமைக்கப்படுவதால் வாகனங்கள் காத்திருந்து முறையாக தங்களது பயணத்தை தொடரும். இதனால் சரியான நேரத்தில் ரோட்டினை கடக்க முடியும். விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்காது. ஆனால் நகரங்களில் அமைக்கப்பட்ட டிராபிக் சிக்னல்கள் பெரும்பாலானவை செயல்படவில்லை. போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஒன்றையொன்று முந்தியும், குறுக்காவும் செல்கின்றன. டூ வீலரில் செல்பவர்களோ , பெரிய வாகனங்களுக்கு இடையே விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர். இவர்களை போலவே ஆட்டோவும் வாகனங்கள் இடையே புகுந்து விபத்தில் சிக்குகிறது. சிக்னல் செயல்படாமல் டிராபிக் போலீசாரும் போக்குவரத்தை 'கன்ட்ரோல்' செய்ய சிரமப்படுகின்றனர்.முந்துவதால் விபத்துநகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சீரமைக்கவும் ஏற்படுத்தப்பட்ட டிராபிக் சிக்னல்கள் செயல்படுவதில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்று விபத்தில் சிக்குகின்றன. டூவீலரில் செல்பவர்களும் கொஞ்ச நேரம் காத்திருந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதில்லை.முத்துக்குமார், சமூக ஆர்வலர், சிவகாசி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X