ரேஷன் கடையில் ரூ.1,000 வாங்க அதிகாலையில் குவிந்த பயனாளிகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் ரூ.1,000 வாங்க அதிகாலையில் குவிந்த பயனாளிகள்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ரேஷன் கடையில் ரூ.1,000 வாங்க அதிகாலையில் குவிந்த பயனாளிகள்

ஊத்துக்கோட்டை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு அறிவித்த 1,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நேற்று, விடியற்காலை முதல், பொதுமக்கள் ரேஷன் கடை முன் குவிந்தனர்.

ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி, 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய், 5 கிராம், 1 கரும்பு துண்டு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் பணம் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.கடந்த, 7ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்க தடை விதித்தது. இதனால், பணம் கிடைக்காதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது.ஊத்துக்கோட்டை தாலுகாவில், 96 வருவாய் கிராமங்களில் உள்ள, 121 ரேஷன் கடைகளில், 42,711 அட்டை வைத்திருப்பவர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இதில், பெரும்பாலானவர்கள் வாங்கி விட்டனர்.

வாங்காதவர்கள் தங்களுக்கு கிடைக்குமா என, ஏங்கினர்.ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில், பொதுமக்கள் காலை, 5:00 மணிக்கே குவிந்தனர். காலை, 8:00 மணிக்கு விற்பனையாளர் வந்து, 'டோக்கன்' வழங்கி, பின், தகுதியான ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்பட்டது. இதேபோல் பெரும்பாலான ரேஷன் கடைகளில், காலை முதல் கூட்டம் காத்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar ramamirdham - Qin Huang Dao,சீனா
12-ஜன-201918:02:14 IST Report Abuse
sivakumar ramamirdham இதுக்கெல்லாம் கால் வலிக்காது, பசி எடுக்காது, மயக்கம் வராது. demonitisation வரிசையில் நின்றால் எல்லாம் வரும். ஓசிக்காக விலை போன தமிழன்
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
11-ஜன-201917:38:29 IST Report Abuse
Ram அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X