விடுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விடுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:தனியார் விடுதிகளில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும், பெண்கள், சிறுவர்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் வரைமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மீனாம்பாள்புரம் கதிரேசன் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:வெளியூர்களில் பணிபுரியும், மற்றும் கல்வி கற்கும் பெண்கள் தனியார் விடுதிகளில் தங்குகின்றனர். விடுதிகளில் போதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருப்பதில்லை. இதை கருதி, 'தமிழ்நாடு பெண்கள், சிறுவர்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் வரைமுறை சட்டம் 2014' கொண்டு வரப்பட்டது.இதன்படி, தனியார் விடுதிகள், இல்லங்களை ஒழுங்குபடுத்தி, பதிவு செய்து, உரிமம் வழங்க கலெக்டர்களுக்கு அதிகாரம் உண்டு.விடுதிகள், இல்லங்களுக்கான கட்டடங்களின் உறுதித்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றிற்கு சில இடங்களில் தீயணைப்புத்துறையினர் லஞ்சம் பெற்று சான்று வழங்குகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில், தனியார் பெண்கள் விடுதியில், சட்டவிரோதமாக ரகசிய கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.இதுபோன்ற சம்பவங்களால், தனியார் விடுதிகளில் தங்கியுள்ள பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.'பெண்கள், சிறுவர்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் வரைமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

விடுதிகளுக்கு சான்று வழங்க லஞ்சம் பெற்ற, சம்பந்தப்பட்ட தீயணைப்புத்துறை அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கதிரேசன் மனு செய்தார்.நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு, தமிழக சமூகநலத்துறை செயலர், தீயணைப்புத் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, 23க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X