எம்.எல்.ஏ., சகோதரர் மருமகன் கொலை சி.சி.பி., விசாரிக்க பா.ஜ., வலியுறுத்தல்| Dinamalar

எம்.எல்.ஏ., சகோதரர் மருமகன் கொலை சி.சி.பி., விசாரிக்க பா.ஜ., வலியுறுத்தல்

Added : ஜன 11, 2019
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெங்களூரு:மகாலட்சுமி லே - அவுட் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கோபாலய்யா சகோதரர் பசவராஜின் மருமகன் மனு கொலை செய்யப்பட்ட வழக்கை, சி.சி.பி.,யிடம் ஒப்படைக்கும்படி பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

மகாலட்சுமி லே - அவுட் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கோபாலய்யா சகோதரர் பசவராஜின் மருமகன் கொலை வழக்கை, சி.சி.பி., எனப்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி, மாநில டி.ஜி.பி.,யை சந்தித்து, பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா தலைமையிலான குழுவினர், நேற்று காலை வலியுறுத்தினர்.

பின், அஸ்வத் நாராயணா அளித்த பேட்டி:எம்.எல்.ஏ., கோபாலய்யா சகோதரர் பசவராஜ் மகள் பல்லவி, தன் வீட்டில் கார் டிரைவராக பணியாற்றிய மனுவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனு கொலை செய்யப்பட்டார். ஆணவக் கொலையாக கருதப்படுகிறது.மூன்று மாதங்களுக்கு முன், பசவராஜ் தன் மகள் பல்லவி, கார் டிரைவர் மனுவுடன் காணாமல் போனதாக, காமாட்சி பாளையா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

திருமணத்துக்கு பின் மனுவும், பல்லவியும் தங்களின் உயிருக்கு ஆபத்துள்ளதாக முகநுாலில் கூறியிருந்தனர். மனு கொலை செய்யப்பட்டார். பல்லவியை காணாதது, பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.சமூக வலை தளங்கள் மூலம், தங்களின் உயிருக்கு அபாயம் இருப்பதாக கூறியும் கூட, அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்கவில்லை.பசவராஜ் ரவுடி பட்டியலில் உள்ளவர். பல்லவியின் பெரியப்பா செல்வாக்கு மிக்க எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட வாய்ப்புள்ளது.

இவ்வழக்கை போலீசார் தீவிரமாக கருத வேண்டும்.இக்கொலையின் பின்னணியில் உள்ள முக்கியப்புள்ளிகளை, வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். வழக்கின் சாட்சிகளை போலீசார் பாதுகாக்க வேண்டும். வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X