ரூ.200 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு ஆதரவாக அ.தி.மு.க.,- தி.மு.க., வன்முறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.200 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு ஆதரவாக அ.தி.மு.க.,- தி.மு.க., வன்முறை

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 ரூ.200 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு  ஆதரவாக அ.தி.மு.க.,- தி.மு.க., வன்முறை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், கோவில் அடிவாரத்தில் நடக்கும் கட்டுமானப் பணி தொடரக் கூடாது என, இந்து முன்னணி வலியுறுத்தியது. ஆனால், அ.தி.மு.க., - தி.மு.க., கைகோர்த்து, இந்து முன்னணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், ஊதியூர் மலையில் பிரசித்தி பெற்ற, உத்தகண்ட வேலாயுத சுவாமி கோவிலுக்கு, 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. மலையடிவாரத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான, 95 ஏக்கரில், தனியார் நிறுவனம், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை, கட்டுமான பணிகளை துவங்கியது.

நிலம் கோவிலுக்கு சொந்தமானதாக கூறி, சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் உதவி கமிஷனர், கண்ணதாசன், நிலத்தை ஆக்கிரமித்து, கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட இடத்தில், அறிவிப்பு பலகை வைத்தார். இதனால், அந்நிறுவனம் பணியை நிறுத்தியது.

ஆனால், தாராபுரம் சப் - கலெக்டர் விசாரித்து, நிலம் தனியாருக்கு சொந்தம் என அறிவித்தார். இதன் பின்னணியில், ஆளுங்கட்சி புள்ளிகளின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.அடுத்த சில நாட்களில், கோர்ட்டில் உத்தரவு பெற்று, மீண்டும் கட்டுமான பணியை நிறுவனம் தொடர்ந்தது.இதை எதிர்த்து, இந்து முன்னணி மாநில தலைவர், சுப்ரமணியம் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், முற்றுகை போராட்டம் நடத்தியதால், மீண்டும் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 'கட்டுமானப் பணிகளை நிரந்தரமாக நிறுத்தி, கோவில் நிலத்தை முழுமையாக மீட்க வேண்டும்' என, இந்து முன்னணி சார்பில், உத்தண்ட வேலாயுத சுவாமி கோவிலில், நேற்று காலை விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.நிகழ்ச்சி முடிந்து, இந்து முன்னணியினர் சென்ற போது, பால் பண்ணைக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் கூட்டாக சேர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.

திடீரென இந்து முன்னணியினருடன் கைகலப்பு ஏற்பட்டது.ஒரு தரப்பினரால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த, காரின் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சம்பவம் குறித்து, எஸ்.பி., கயல்விழி விசாரணை நடத்தினார். இரு தரப்பைச் சேர்ந்த, 100 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியை சுற்றி, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டம் தீவிரமாகும்

இந்து முன்னணி மாநில தலைவர், சுப்ரமணியம் கூறுகையில், ''சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது, பொதுமக்கள் என்ற போர்வையில், கட்சியினர் திட்டமிட்டு தாக்கினர். இதை போலீசாரும் வேடிக்கை பார்த்தனர். கோவில் நிலத்தை மீட்பதில் உறுதி எடுத்துள்ளோம். விரைவில், ஆலோசனை கூட்டம் நடத்தி, போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
17-ஜன-201919:33:52 IST Report Abuse
Jayvee திருடர்கள் முன்னேற கழகம், திருடர்கள் கழகம், அறிவில்லா திருடர்கள் முன்னேற்ற கழகம் இவர்களுடன் அல்லுலேயா, ஐஸ் தீவிரவாதிகள் மற்றும் சீன அடிமைகளும் கை கோர்த்து கொள்ளை அடிப்பதை நேர்மையான நீதிபதிகள் அனுமதிப்பார்களா ?
Rate this:
Share this comment
Cancel
puratchiyalan - Nagercoil,இந்தியா
14-ஜன-201910:51:20 IST Report Abuse
puratchiyalan பிஜேபி - RSS, இந்து முன்னணியை வைத்து கலவரம் ஏற்படுத்தி, ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜன-201921:46:03 IST Report Abuse
Bhaskaran கோவில் சொத்தை கொள்ளையடிப்பதில் இவனுக ரெண்டுபேரும் ஒன்றுதான் ஒரே ஆச்சரியம் அறநிலையத்துறையும் இந்த கயவர்களுக்கு துணைபோகும் இந்த கேசில் அப்படி இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X