பொது செய்தி

இந்தியா

அலோக் வர்மா மீண்டும் நீக்கப்பட்டது ஏன் ?

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (41)
Advertisement
அலோக் வர்மா, சிபிஐ தலைவர், மத்திய தேர்வு குழு, சிவிசி

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ இயக்குனராக ஜனவரி 09 அன்று பதவியேற்ற அலோக் வர்மாவை, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக் குழு நேற்று (ஜன.,10) மீண்டும் பதவியிலிருந்து நீக்கியது.
உயர்மட்ட தேர்வுக் குழுவில் இடம்பெற்ற பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க தீர்மானித்தனர். ஆனால் இக்குழுவில் இருடம்பெற்ற மற்றொரு உறுப்பினராக காங்.,ன் மல்லிகார்ஜூன கார்கே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உண்மையில் சிவிசி (மத்திய புலனாய்வு ஆணையம்) அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அலோக் வர்மாவின் பதவி மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது.
சிவிசி அளித்த அறிக்கையின்படி, அலோக் வர்மாவுக்கு எதிரான 10 புகார்களே அவர் மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது. இவற்றில் 3 புகார்களுக்கு ஆதாரம் உள்ளது. 6 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. ஒரு புகாருக்கான ஆதாரத்தின் நம்பகத்தன்மை பல்வேறு மாறுபாடுகளை கொண்டதாக உள்ளது. அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்களில் முக்கியமானது, சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றது தான்.
இதே போன்று ஐஆர்சிடிசி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமலும், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகளில் தப்பிக்கு வகையில் விலக்கு அளித்தது, டில்லி விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியது ஆகியனவே அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய தேர்வுக்குழு முடிவு எடுக்க முக்கிய காரணங்களாகும். இந்த குற்றச்சாட்டுக்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சில வழக்குகளில் கிரிமினல் விசாரணை உள்ளிட்டவைகளும் நடத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் சிபிஐ தலைவர் பதவியில் அலோக் வர்மா தொடர்ந்தால் இந்த விசாரணை நடப்பது சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar.s. - bangalore,இந்தியா
11-ஜன-201916:42:19 IST Report Abuse
kumar.s. இந்த வர்மா இப்போது தன பதவியை ராஜினாமா செய்து விட்டார். இனி தான் திரட்டிய ஆதாரத்தையெல்லாம் வைத்து மோடி மீது இதே சிபிஐ யிலோ அல்லது நேராக கோடரிலோ வழக்கு தொடுத்து இந்த வூழல் அரசுக்கு சிம்ம சொப்பனம் ஆகப்போகிறார். இவர் காங்கிரசில் சேர்ந்து எம்.பி. ஆகி பார்லியமென்ட்டிலேயே நேருக்கு நேர் மோதினாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.
Rate this:
Share this comment
suresh kumar - Salmiyah,குவைத்
12-ஜன-201909:52:23 IST Report Abuse
suresh kumarசெய்யட்டும். செய்யணும். கெஜ்ரிவால் மாதிரி, யாராவது ஆதாரம் குடுங்க நான் வழக்கு போடுறேன்னு சொல்லக்கூடாது...
Rate this:
Share this comment
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
11-ஜன-201916:22:50 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் yaaro - chennai,இந்தியா 11-ஜன-201913:32:10 IST Report Abuse yaaroகாமெடி என்ன தெரியுமா...இதே கமிட்டி இதே அலோக் வெர்மாவை நியமிக்கும் போது..அதை எதிர்த்து ஓட்டு போட்டதும் இதே கார்கே தான் ... /////// அப்போது அவர் காங்கிரஸ் கைக்கூலி என தெரிந்துவிடும் என காங்கிரஸ் சும்மா கூப்பாடு போட்டது ..........
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
11-ஜன-201915:17:34 IST Report Abuse
Girija இன்னும் இருபது நாளில் எதை மாற்றிவிடபோகிறார் ? அந்த வழக்குகள் அனைத்தையும் ஜனவரி முப்பத்திஒண்ணம் தேதி வரை யாரும் விசாரிக்க கூடாது பேசக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கலாம். இத்தனை நாள் சி வி சி என்ன செய்து கொண்டிருந்தது ? மோடி தனக்கு பின்னால் உள்ளது குதிரைப்படை என்று நம்பி கழுதைப்படைகளை நம்பி மோசம் போகிறார். இது அலோகவர்மாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி ஆனால் இவர் அனேகமாக காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராகிவிடுவார் வயது சான்றிதழ் விவகாரத்தில் தப்பி பிழைத்த வீ கே சிங் மந்திரியாகிய மாதிரி .
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
11-ஜன-201921:36:41 IST Report Abuse
தாமரை ஏம்மா கிரிஜா இந்த அலோக்கும் இன்னொருவரும் மாறி மாறி ஒவ்வொருத்தனையும் காட்டிக்கொடுத்தது தெரியலையா உனக்கு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X