பாஜவை வீழ்த்த அகிலேஷ் - மாயா கூட்டணி| Dinamalar

பாஜவை வீழ்த்த அகிலேஷ் - மாயா கூட்டணி

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (19)
Advertisement
அகிலேஷ், மாயாவதி, லோக்சபா தேர்தல், கூட்டணி, உ.பி.,காங்.,

லக்னோ : உ.பி.,யில் பாஜவை வீழ்த்த லோக்சபா தேர்தலில் அகிலேசின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைப்பது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை (ஜன.,11) இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளனர். இருகட்சிகளும் பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. வரும் லோக்சபா தேர்தலை இருகட்சிகளும் இணைந்து எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் இருகட்சிகளும் இணைந்து காங்.,ஐ ஆதரித்தன.


பாஜவை வீழ்த்த:

இக்கட்சிகளின் கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தள், நிஷாத் கட்சி போன்ற சிறு கட்சிகளும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று சோனியா மற்றும் ராகுல் தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது எனவும் அகிலேசும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.
பா.ஜ.,வை வீழ்த்துவதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதி வேட்பாளர்களை சோனியாவும், ராகுலும் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
12-ஜன-201915:07:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மாயா அவதி அண்ட் அகிலேஷா கூட்டு ரெண்டுமே பொய்பித்தலாட்டக்கூட்டம்தானே மக்களுக்கு நன்னாவே தெரியும் இந்த ரெண்டு....களைப்பற்றி காங்கிரஸ் +திமுக + மாக்சிஸ்ட் = மாயாவை அவதி அண்ட் அகிலேஷ் + திரிணாமூல் இந்த யாருமே நம்ம நாட்டையே அளிக்க காத்திருக்கும் கரையானுகள்
Rate this:
Share this comment
Cancel
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
11-ஜன-201919:33:24 IST Report Abuse
Gideon Jebamani All political forces must join against Modi's facisit regime. I will do my best using social media.
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
11-ஜன-201915:43:06 IST Report Abuse
metturaan வலுவான எதிர் கூட்டணி அமைந்தால் தான் .. பி ஜே பி கும் நல்லது ..அப்போதுதான் தன்.தவறுகளையும் சறுக்கல்களையும் சரிசெய்யமுடியும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X