அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுடன் கூட்டணியா: ஸ்டாலின் மறுப்பு

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (66)
Advertisement
ஸ்டாலின், பா.ஜ., கூட்டணி, திமுக, மோடி, வாஜ்பாய், கருணாநிதி

சென்னை : பா.ஜ.,வுடன் திமுக ஒரு போதும் கூட்டணி வைக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தமிழகத்தில் பழைய நண்பர்களுக்காக பா.ஜ.,வின் கூட்டணி கதவு எப்போதும் திறந்திருக்கும் என தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அழைப்பிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பதிலளித்துள்ளார்.


கூட்டணி இல்லை:

அதில் அவர், பா.ஜ.,வுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை. குறைந்தபட்ச செயல்திறன் அடிப்படையிலேயே பா.ஜ.,வுடன் கருணாநிதி கூட்டணி வைத்திருந்தார். மதவாத குரல்கள் எழுந்ததும் பா.ஜ., கூட்டணியில் இருந்து திமுக உடனடியாக வெளியேறியது.

மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் தமிழகம் உரிமைகள் அதிகம் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. இது அவரின் வழக்கமான தேர்தல் பிரசார யுத்தி. பா.ஜ.,வின் அழைப்பை திமுக ஒருபோதும் ஏற்காது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandasamy sundaresan - bangalore ,இந்தியா
11-ஜன-201923:39:34 IST Report Abuse
kandasamy sundaresan குடும்ப கட்சியுடன் அதுவும் தி.மு.க. என்ற சர்வ வல்லமையுடைய ஒரு ஊழல் கட்சியுடன் பீ.ஜெ.பி. சேர அதனுடைய அடிமட்ட தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இப்போது உள்ள தி.மு.க வை - கடவுளால் கூட திருத்த முடியா கட்சி ஆகி விட்டது. "துஷ்டரை கண்டால் தூர விலக வேண்டும் " என்பது அடிப்படை தொண்டர்களின் கருத்து.
Rate this:
Share this comment
Cancel
Raghul Smart - mos,ரஷ்யா
11-ஜன-201921:05:36 IST Report Abuse
Raghul Smart சுடலை மற்றும் கனி , அண்னன் அழகிரியை கட்சியில் சேர்க்காத சமுக நீதி அரசர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
11-ஜன-201921:05:36 IST Report Abuse
Nisha Rathi பிஜேபி ஒருபோதும் உன்னுடன் கூட்டணி வைக்காது அப்படி வைத்துக்கொண்டால் தற்கொலைகள் பல நிகழும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X