பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

Updated : ஜன 11, 2019 | Added : ஜன 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளையில், அவனியாபுரத்தில் வரும் 15ல் ஜல்லிக்கட்டு நடத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தி வருபபவர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. இதனை விசாரித்த கோர்ட், ஜல்லிக்கட்டு நடத்த மாற்று ஏற்பாடாக, நீதிமன்ற கமிஷனர் ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனக்கூறியிருந்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் ,3 வழக்கறிஞர்கள், உள்ளூர் பிரமுகர்கள் 16 பேர் இடம்பெறுவார்கள். 15ல் ஜல்லிக்கட்டை டத்தி கொள்ள அனுமதி வழங்கியுள்ள கோர்ட், யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு


மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் மேலும் 11 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 35 பேர் கொண்டதாக குழு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை அடுத்து அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
11-ஜன-201914:48:15 IST Report Abuse
கலியுக கண்ணன் விலங்கு நல தொண்டார்வ நிறுவனங்களுக்கு எந்த விலங்கையும் கொள்ளாமல் நடத்தும் ஜல்லிக்கட்டு விலங்குகளுக்கு செய்யப்படும் ஜீவ ஹிம்சை . ஆனால் ஒரே நாள் பல விலங்குகள் மதம் என்ற பெயரில் கொல்வதும் பல இடங்களில் ரத்த ஆறு ஓடுவதும் ஜீவ காருண்யம் . வாழ்க நவீன யுக புத்திஜீவிகள்
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
11-ஜன-201914:37:32 IST Report Abuse
Sivagiri க்ரிஸ்டியன்களை - கம்யூனிஸ்ட் போர்வையில் க்ரிஸ்டியன்களை - உள்ளே விடாதீங்கப்பா . . . அப்புறம் ஜல்லிக்கட்டே கிறிஸ்டியன் திருவிழான்னு சொல்லி - தை பொங்கலை கிறிஸ்துமஸ் ஆக்கி விடுவாய்ங்க . . . குழுவில் இருக்கிறவர்கள் யாரும் க்றிஸ்டின்கள்-கம்யூனிஸ்டுகள்- இல்லாமல் பாத்துக்கோங்க . . . சபரிமலையில் நுழைந்தது போல - தூத்துக்குடி ஸ்டெர்லிட் எதிர்ப்பு கூட்டம் போல - கம்யூனிஸ்ட் க்றிஸ்டின்கள் எல்லா இடங்களிலும் கலவரம் செய்ய நோட்டம் பாத்துக்கிட்டு இருக்காய்ங்க . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X