கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு : ஐகோர்ட் அனுமதி

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (56)
Advertisement
பொங்கல் பரிசு, ரூ.1000, சென்னை ஐகோர்ட், ரேஷன் கார்டு

சென்னை : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அடுத்து, வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது.
நீதிபதிகள் கூறுகையில், இலவச திட்டங்களை பயன்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும். ஓட்டுக்காக மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்குவதாக மக்கள் கருதுகிறார்கள். அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள போது மக்களை வரிசையில் காக்க வைப்பது சரியா? இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுக்கவும். ஆந்திரா, கர்நாடகா, கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கே தமிழக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இலவசங்களை வழங்கிக் கொண்டு இருப்பீர்கள்? தமிழகத்தில் வெளி சந்தைகளில் இலவச அரிசி விற்கப்பட்டு வருகிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
12-ஜன-201909:21:49 IST Report Abuse
Subramanian Sundararaman Perhaps the case is not properly represented in the court. The issue of Green card and White card is not based on income criteria but based on the option of either rice or sugar by the people. It is 12 years since the ration cards were issued. If it is on the income basis there should have been a revision over a period of 12 years at least for the new cards. The colour of the ration card does not indicate the BPL status of the consumer . Instead the pongal gift could have been limited to ration card holders drawing kerosene. Almost all middle class have 2 gas cylinders. and not entitled for kerosene.Mostly the BPL people could have availed the benefit .
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
12-ஜன-201907:31:36 IST Report Abuse
arudra1951 எடுப்பது என்று முடிவு கட்டி விட்டால் மேல் வர்க்கம் என்ன கீழ் வர்க்கம் என்ன . ஒரு துண்டு கரும்பு வாங்க வக்கில்லாதவர்களுக்கு எதற்கு ஜனநாயகம் ?
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12-ஜன-201901:59:27 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மீது கடும் சட்டம் பாயவேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X