துபாய் பயணம் மேற்கொண்ட ராகுல்

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (39)
Advertisement
ராகுல், துபாய், சுற்றுப்பயணம்

துபாய் : காங்., தலைவர் ராகுல் 2 நாள் பயணமாக நேற்று (ஜன.,10) மாலை துபாய் சென்றடைந்தார்.

துபாய் விமானநிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். துபாய் சென்றுள்ள ராகுல் அங்கு, இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை சந்தித்து பேச உள்ளார். முதல் முறையாக துபாய் சென்றுள்ள ராகுல், ஐக்கிய அரபு அமீர அமைச்சர்கள் சிலரையும் சந்திக்க உள்ளதாக கலீஜ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

துபாய் மற்றும் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 11 (இன்று) நடக்கும் இந்தோ-அரபு கலாச்சார நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - Qin Huang Dao,சீனா
12-ஜன-201917:52:46 IST Report Abuse
sivakumar கிறிஸ்டின் மைகேல் மாமா எங்கு, யாரிடம், என்ன உலறினான், யாரை போட்டு கொடுத்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த துபாய் விஜயம். முடிந்தால் துபாய் மன்னரிடம் பேசி அவரை நாடு கடத்திய நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை நாடு கடத்த வேண்டுகோள் வைப்பார்
Rate this:
Share this comment
Cancel
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201917:08:28 IST Report Abuse
கலியுக கண்ணன் சென்ற இடங்களிலெல்லாம் இந்தியா மதவாத நாடாக ஆகிவிட்டது என்று கேவலமாக நாட்டை கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தி கொண்டிருந்தான் இந்த ராகுல் வின்சி நேரலையில் 14 வயது சிறுமியிடம் துபாயில் அசிங்கபட்ட ராகுல்காந்தி நேரலையை நிறுத்திய பரிதாபம். நேரலையில் 14 வயது சிறுமியிடம் துபாயில் அசிங்கபட்ட ராகுல்காந்தி நேரலையை நிறுத்திய பரிதாபம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியல் மாநாடு மற்றும் துபாய் நாட்டின் தலைவர்களை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாய் நாட்டின் இளவரசரை சந்தித்து பேசிய ராகுல் காந்தி மாலையில் இந்தியர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் துபாய் வாழ் இந்தியர்களிடையே பேசிய ராகுல் காந்தி இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை என்றும் பாஜக அரசின் நடைமுறையினால் இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி மோடி மற்றும் இந்தியா குறித்த தனது கருத்தை மக்களிடம் எடுத்துவைத்தார். 14 வயது தமிழ் சிறுமி கேள்வி : தனது பதில்களுக்கு இடையே பொதுமக்களை நோக்கி ஏதேனும் கேள்வி இருக்கிறதா என்று கேட்க நிறைய நபர்கள்முன்வந்த நிலையில் சிறுமியிடம் மைக்கை கொடுக்குமாறு ராகுல் காந்தி சைகை காட்ட விழா ஏற்பாட்டாளர்கள் சிறுமியிடம் மைக்கை கொடுத்தனர். கேள்விகளால் துளைத்தெடுத்த சிறுமி அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த சிறுமி ராகுல் காந்தியிடம் முதலில் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது… இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள் அதுவே காஸ்மீரில் நடந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன் என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் காந்தி ஆடி போய்விட்டார், ராகுல் பதில் - அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும் விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார். மற்றொரு கேள்வி -இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 % ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்கள் என்றுகேட்க அவ்வளவுதான் ராகுல் காந்தியின் முகம் மாறிவிட்டது அவரால் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்த படியே இருந்தார். இதனை எதிர்ப்பாரத காங்கிரஸ் IT டீம் நேரலையை நிறுத்தியது. மேலும் சிறுமி கூறியதாவது இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இனிமேலாவது தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் என்று சொல்லாமல் ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள் இந்திய மக்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவிக்க அரங்கில் கை தட்டல் ஒழிக்க ஆரம்பித்தது. ராகுல் காந்தியிடம் துணிவாக கேள்வி கேட்ட சிறுமியை பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இனி ராகுல் காந்தி துபாய் பக்கம் செல்லவே நினைக்கமாட்டார் அடி அப்படி.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
12-ஜன-201906:54:08 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடிச்சு கொள்ளைகள் பலகோடிகள் இருக்குய்யா என்ண கவலை அம்மாக்கு ட்ரீட்மென்டுக்கு யு எஸ் ஏ தான் போவாக மச்சானோ மலைமுழுங்கி மஹாபிரபு எம் பீ வேறு கைலே காசு துள்ளுது உணவுக்கு எவன் வீட்டுலேயும் நுழைஞ்சு துன்னுடுவான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X