மோடியை வெல்ல முடியாது: அமித்ஷா

Added : ஜன 11, 2019 | கருத்துகள் (34)
Advertisement
 மோடி, அமித்ஷா, ஆட்சி, பா.ஜ., பிரதமர்

புதுடில்லி: வரவிருக்கும் தேர்தலில் மோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசுகையில் குறிப்பிட்டார்.
டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் 2 நாள் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் 60 கோடி பேருக்கு வங்கிகணக்கு துவக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் 50 கோடி பயன்பெற்றுள்ளனர். பா.ஜ., அரசுக்கு வருவதற்கு முன்னர் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி வெற்றிகரமாக முடித்தார். இஸ்ரேல், அமெரிக்கா தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு எங்களின் முக்கிய இலக்கு. மோடி அரசாட்சியின் கீழ் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. குடி மக்கள் சட்டம் இயற்ற ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் உண்மை நிலை என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது. தாயும், மகனும் ஜாமினில் உள்ளனர்.
ஆதாரம் இல்லாமல் மோடி மீது எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பார்லி.,யில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., விரும்புகிறது.

மோடியை யார் ஒருவராலும் வீழ்த்திட முடியாது, இதனால் பலரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது எங்களுக்கு பெருமைதான். இந்த மெகா கூட்டணி சுயநலமுடையது. எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள அணி கொள்கை இல்லாதது. எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் மோடியை வெல்ல முடியாது. வளர்ச்சி பாதையில் மோடி இந்தியாவை அழைத்து செல்கிறார். வரும் 2019ல் மோடியே ஆட்சியை பிடிப்பார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201905:14:10 IST Report Abuse
Nepolian S ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் இவ்வளவு உறுதியாக சொல்கிறார் அது ....வாக்கு இயந்திரமாக கூட இருக்கலாம்... ஐந்து மாநிலங்களில் செய்யாமல் விட்டு கொடுப்பதுபோல் விட்டு கொடுத்து மக்களை நம்ப வைத்து ... அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு இயந்திரத்தின் உதவியுடன் வென்றுவிட முடியும் என்று கர்சித்துள்ளார்
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
11-ஜன-201923:16:32 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam I welcome his self confidence.
Rate this:
Share this comment
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201900:29:59 IST Report Abuse
கலியுக கண்ணன்It is not self confidence but he is telling the reality . The reality is BJP will cross 300 seats alliance will cross 400 seats . This is my calculation based on voting patterns . In rajasthan and madhya pradesh even though BJP lost still they got one percent more votes . BJP lost more than 20 seats just with 4337 votes . Another one percent swing will happen due to modi factor and congress infighting in four months .It will make BJP to get clean sweep . Remember my words after election results ....
Rate this:
Share this comment
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
12-ஜன-201900:41:20 IST Report Abuse
கலியுக கண்ணன்ஐந்து ஆண்டுகளாக தாக்குதல் நடத்த முடியாத ஜிஹாதிகளும் , மக்கள் விழிப்புணர்வால் ஏமாற்றம் அடைந்த மத மாற்ற கும்பல்களும் , உலக நாடுகளால் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு என்று ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தானும் , கான்-க்ராஸ் ஆட்சியால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மீடியாக்களும் , தேச துரோக தன்னார்வ நிறுவனங்களும் , லிபெரல்ஸ் என்று கூறிக்கொள்ளும் ஹிந்து விரோத சக்திகளும் , 60 ஆண்டுகளில் நாட்டைச் சுரண்டிய எல்லா ஊழல் கட்சிகளும் , கான்-கிராஸும் , சேர்ந்து மோடிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன . அமைதி விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் நான்கு ஆண்டுகளில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடக்காமல் தடுத்த , அள்ளும் பகலும் உழைத்த மோடிக்கு கண்டிப்பாக வோட்டளிப்பான்...
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
11-ஜன-201923:15:21 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam I appreciate his self confidence.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X