சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 11, 2019
Advertisement

அறிவியல் ஆயிரம் டிரைவர் இல்லா ரயில்
உலகளவில் ரயில்வே துறையில் பல புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் சீனா முன்னணியில் உள்ளது. தற்போது உலகில் முதன்முதலாக டிரைவர் இல்லாமல் இயங்கும் புல்லட் ரயிலை இயக்கி சாதித்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்லும். பீஜிங் - ஜான்ஜியாகவ் இடையே சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரயில் பாதை 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணி நிறைவடையும். மொத்த துாரம் 174 கி.மீ. சீனாவில் 1.27 லட்சம் கி.மீ., துாரத்துக்கு ரயில் சேவை இயக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்
பணவீக்கம்

பொருளாதாரத்தில் 'பணவீக்கம்' முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறிப்பிட்ட இடைவெளியில் பொருட்கள் மற்றும் சேவையில் ஏற்படும் விலையேற்ற விகிதத்தை குறிப்பிடுகிறது. உதாரணமாக 2008ல் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 20. 2018ல் விலை ரூ. 60 ஆகிறது எனில், பத்து ஆண்டுகளில் அரிசியின் விலை 'மூன்று மடங்கு' அதிகரித்துள்ளது. இவ்வாறு ஒரு பொருளின் விலை குறிப்பிட்ட ஆண்டுகளில் அதிகரிப்பது பணவீக்கம் எனப்படுகிறது. பணவீக்கம் அதிகரிப்பது மக்களின் வாங்கும் சக்தியை குறைக்கிறது. பணவீக்கத்தில் சில வகைகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X